ஜவ்வரிசி அல்வா

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி -1 கப்
சர்க்கரை – அரைத்த விழுதின் ஒன்றரை மடங்கு
நெய் -100 கிராம்
முந்திரி 50 கிராம்
கேசரி கலர் பவுடர் -1/2 ஸ்பூன்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை :

ஜவ்வரிசியை எட்டு மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைத்த விழுதை பஜ்ஜிமாவு பதத்தில் செய்து வைத்துக்கொண்டு அடி கனமான வாணலியில் ஊற்றவும். அதில் சர்க்கரை மற்றும் கலர் பவுடர் போட்டு கிளறி, அது கெட்டியாகும் போது நெய் ஊற்றிக் கிளறவும்.

நன்றாக கொதித்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி பருப்பையும், ஏலப்பொடியையும் சேர்த்து ஒரு தட்டில் கொட்டி துண்டம் போடவும்.

சுவையான ஜவ்வரிசி அல்வா தயார்!

About The Author