ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு அரசு பணி கிடைக்குமா? எப்போது கல்யாணம் பண்ணினால் நன்றாக இருக்கும்? – சுரேஷ், கடையநல்லூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சுரேஷ் அவர்களே!

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் மகரம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, அரசின் உதவி அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரியும் வாய்ப்பு இருக்கிறது. 25 வயதுக்கு மேல் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

****

நான் 10 வருடமாக தோல் நோயால் அவதிப்படுகிறேன்? பரிகாரம் என்ன? திருமணம் எப்போது நடக்கும்? – விஜய் ஆனந்த், கும்பகோணம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. விஜய் ஆனந்த் அவர்களே!

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி ராசி மீனம், லக்னம் கன்னி ஆகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "மின்னுமா மேகங்கள் பொழிந் தருவி" என்ற பாடலை தினமும் ஓதி வாருங்கள். புதன்கிழமை தோறும் புதன் பகவானுக்கு முழு பச்சைப் பயிறு நிவேதனம் செய்வதுடன், உங்கள் பெயரிலும் அர்ச்சனை செய்து வர, தோல் நோயின் தீவிரம் குறைந்து குணம் பெறுவீர்கள்.

****

என் கைக்கு பணம் வந்தால் நிலையாக இருப்பதில்லை. செலவு அதிகமாக வருகிறது. எந்த வேலை செய்தாலும் அதிகமாக தடங்கல் ஏற்படுகிறது. இதற்கு பரிகாரம் என்ன? – மாரிசெல்வம், கடையநல்லூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. மாரிசெல்வம் அவர்களே!

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் ரிஷபம் ஆகும். பணத்தை போட்டு வைக்கும் பணப் பெட்டியில் கற்பூரம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும், தன லக்ஷ்மியின் படம் ஒன்றையும் வைத்திருங்கள். கையில் பணம் தங்கும். எந்தச் செயலையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டபின் வேலைகளைத் துவங்க, காரியத்தடை நீங்கும்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author