ஜோதிடம் கேளுங்கள் !

நான் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். கடன் தொல்லை அதிகமாக உள்ளது. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? – மோகன், மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மோகன் அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் தனுசு. தங்களின் ஜாதகத்தில், வளத்தைக் குறிக்கும் குரு, தங்களின் ராசியிலிருந்து லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் மே மாதம் வரை உள்ளார். தாங்கள் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும். விரைவில் வேலையும் கிடைத்து, கடன் தொல்லையும் தீர்ந்து விடும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

கடந்த நான்கு மாதங்களில் வேலை இழப்பு, சம்பள இழப்பு, தாயார் மரணம், மன வலிமை இழப்பு என பலவற்றை இழந்து விட்டேன். என் எதிர்காலம் எனக்குப் புரிபடாததாக இருக்கிறது. தயவு செய்து உதவுங்கள். – ராமகிருஷ்ணன், சிதம்பரம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராமகிருஷ்ணன் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது குரு திசை செவ்வாய் புத்தி 02.01.2011 வரை நடைபெறும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை ஆராதித்து வருவதோடு, ”முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு மீடியாற்படியில் விதனப் படார் வெற்றி வேற் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் திரு நாமம் புகல்பவரே” என்ற கந்தரலங்காரப் பாடலைப் படித்து வாருங்கள். தங்களின் துன்பங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறுவதோடு வாழ்வும் வளம் பெறும். மன வலிமை பெற்று வாழ்வை புதிய கண்ணோட்டத்தில் நோக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

**********

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author