ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய ராசி மிதுனமா அல்லது கடகமா? எனக்கு சுக்கிர திசையாவது நன்றாக இருக்குமா? – ஜவஹர், மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜவஹர் அவர்களே !

46 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம் 4-ம் பாதம், ராசி கடகம் ஆகும் . லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது சுக்ர திசை, சுக்ர புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சுக்ர புக்தியானது 28.04.2013 வரை நடைபெறும். அதற்குப் பின் வரும் காலம் நல்ல வளத்தைக் கொடுக்கும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

***********

எனக்குப் பெண் பார்த்து வருகிறார்கள். எப்போது எனக்கு திருமணம் நடக்கும்? சிலர் எனக்கு இருதாரம் என்று சொல்கிறார்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லவும். – சீனிவாசன், கரூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சீனிவாசன் அவர்களே !

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபடுவதோடு, சமயபுரம் மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு மாவில் நெய் தீபம் ஏற்றி 16 வாரம் தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வர, திருமணம் ஆகஸ்ட் 2011 வாக்கில் கை கூடும். இரு தார அமைப்பு தங்கள் ஜாதகத்தில் இல்லை. அத்துடன் தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வரவும். நல்ல மண வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. N.Maithreyi

    Dear Astrologer,

    I am of star Avittam and my rasi is Khumbam. When will my 2 and 1/2 years of Saturn end?
    Thank you for the guidance, Maithreyi.

Comments are closed.