ஜோதிடம் கேளுங்கள்

இவ்வருடம் மார்ச் மாதம் பததாம் வகுப்பு எழுத போகிறேன். தயவு செய்து பரிட்சை ரிசல்டு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். -ஐஷ்வர்யா பாலசுப்ரமணியன், கொல்கத்தா.

அன்பு நிலாச்சாரல் வாசகி ஐஸ்வர்யா பாலசுப்ரமணியன் அவர்களே !

15 வயதாகும், தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மேஷம். நடக்கின்ற தசாபுக்தி நல்ல மதிப்பெண்கள் பெறுவதை குறிக்கிறது. நீங்கள் நல்ல மதிப்பெண் பெற, தினமும், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி பாடலை படித்து வரவும்.

எனக்கு எப்போது வேலை கிடைக்கும், என்னுடைய ராசி தனுசு நட்சத்திரம் மூலம். எனது லக்கினம் என்ன என்று சொல்லுங்கள். – B. பிரபு, சிவகாசி.
 
அன்பு நிலாச்சாரல் வாசகர் பிரபு அவர்களே !

தாங்கள் கொடுத்த நேரத்திற்கு மேஷ லக்னம் வருகிறது. குரு பகவான், மே 2012, தங்கள் லக்னத்திலிருந்து 2-ம் வீடான ரிஷபத்திற்கு போகும் காலம், தங்களுக்கு வேலை கிடைத்து விடும். நல்ல வேலை கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.”

About The Author