ஜோதிடம் கேளுங்கள்

நான் மலேசியாவில் இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கிறேன். எனது படிப்பு இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. இதற்குப் பின் மேல் படிப்பு படிக்கலாமா அல்லது படிப்புக்கேற்ற வேலை தேடலாமா? என் திருமணம் நான் விரும்புபவருடன் நடக்குமா? – சின்மயன், ஜாஃப்னா, இலங்கை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சின்மயன் அவர்களே!

22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் கன்னி ஆகும். தாங்கள் தற்போது படிக்கும் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை வெளி இடத்தில் கிடைக்கும். தாங்கள் விரும்பியவருடன் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல வேலை, நல்ல வாழ்க்கை இரண்டும் அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****** 

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? எனக்கு பேசும் திருமணம் கடைசியில் நிறைவேறாமலேயே முடிந்து விடுகிறது. அதற்கான காரணம் என்ன? எந்த வயதில் திருமணம் நடக்கும்? – அருணா, ஜாஃப்னா.

அன்பு நிலாச்சாரல் வாசகி அருணா அவர்களே!

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் சிம்மம், ஆகும். தங்களின் திருமணம் தடையின்றி நடக்க, தங்களின் ஜென்ம நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் பெருமாள் கோவிலில் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். ஆங்கிலப் புத்தாண்டுக்குள் திருமணம் கை கூடிவிடும். நல்ல மண வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****** 

என் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7ல் புதன், சனி, குரு, சந்திரன் உள்ளதால் தோஷம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? எஸ்.ஆர்.ராஜசேகர், ஈரோடு.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜசேகர் அவர்களே!

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் மீனம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் கிரகங்களோடு குருவும் சேர்ந்துள்ளதால் அது தோஷமல்ல. திருமணத்தை அளிக்க வல்ல குரு பகவானை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வரவும். 2010 ஜுன் மாதத்தில் தங்களுக்கு திருமணம் கை கூடி விடும். திருமணம் விரைவில் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author