ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வாக்கு பலிதம் உண்டா? நான் ஜோதிடம் கற்று தொழிலாக செய்யலாமா? – ஆர். தேவராஜன், மேட்டூர் அணை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் தேவநாதன் அவர்களே!

56 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி விருச்சிகம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் சந்திரன் குரு சாரம் பெற்றிருப்பதாலும், குரு உச்ச வீட்டில் இருப்பதாலும், தாங்கள் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளலாம். தாங்கள் நல்ல ஜோதிடராகத் திகழ நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

**************

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? – பி.ஜெயந்த்குமார், காஞ்சிபுரம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜெயந்த்குமார் அவர்களே !

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது சூரிய திசை, சுக்ர புக்தி 18.07.2011 வரை நடைபெறும். இதற்குப் பின் வரும் சந்திர புக்தியில் தங்களின் திருமணம் கைகூடிவிடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

**************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author