ஞாயிறு முதல் சனி வரை (3)

செவ்வாய்

வருடம் : 3047, செப்டம்பர் 1

இடம்: வினோடிகா விண்வெளி நிலையம், செவ்வாய் கிரகம்

அந்தப் பிராணிகள் அனைத்தும் வித்தியாசமாய் இருந்தன. நீண்ட கழுத்து, பெரிய கண்கள், பெரிய தலை, பச்சை நிறம் என்று….

அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விண்கலனினுள் நுழைந்தன. பின்னர் விண்கலத்தின் வாயில் கதவு அடைக்கப்பட்டது.

விண்கலம் விண்ணில் சீறிப் பாயத் தொடங்கிய சிறிது நேரத்தில் கேப்டனின் குரல் மைக்கில் ஒலித்தது.

"மாணவர்களே! நாம் மீண்டும் தரையிறங்கப் போகிறோம். அனைவரும் பெல்ட்டை மாட்டிக் கொள்ளவும்!"

அனைத்துப் பிராணிகளுக்கும் ஒரே குழப்பம்!

அந்தக் குரல் தன் உரையைத் தொடர்ந்தது. "நாம் பூமிக்கு சுற்றுலா செல்வது எல்லோரும் அறிந்ததே! ஆனால், பூமியில் நமக்குத் தேவையானதும், பூமியில் இல்லாததுமான ஒன்றை எடுக்க மறந்து விட்டோம்."

"அது…..

… குடிதண்ணீர்!!!

அதை எடுக்கவே தரையிறங்குகிறோம்…!"

About The Author