ஞாயிறு முதல் சனி வரை (5)

வியாழன்

‘வியாழன்’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைபெற்றுக் கொண்டிருந்து.

விழாவிற்கு ரவியும், ராதாவும் வந்திருந்தார்கள். இருவரும் படத்தின் ஹீரோ, ஹீரோயின்.

ரவியின் மனைவி டோனாவும் விழாவிற்கு வந்திருந்தாள். முன்வரிசையில் அமர்ந்துகொண்டு ரவியும் ராதாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு முறைத்துக் கொண்டிருந்தாள். டோனாவிற்கு ஏற்கெனவே சந்தேகம் அதிகம்.

விழா முடிந்ததும் டோனா ரவியிடம், "ராதாவை வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிடுங்களேன். நாங்க ரெண்டு பேரும் காலேஜ்மேட்ஸ் தெரியுமா?" என்றாள்.

ராதாவும் ஆமோதித்தாள். ரவிக்கு ஒரே மகிழ்ச்சி! ‘டோனா திட்டுவாள்’ என்று நினைத்தவனுக்கு இது புதிராகவே இருந்தது.

மேலும், அடுத்த படமும் ரவியும், ராதாவும் சேர்ந்து நடிப்பதாக முடிவானது.

ஒரு வியாழக்கிழமையன்று ராதாவும் ரவி வீட்டிற்கு வந்தாள். டோனா அன்பாக வரவேற்று உபசரித்தாள். தனியாக இருவரும் பேசினார்கள். ‘காலேஜ் கதைகளைப் பேசுவார்கள்’ என்று நினைத்துக் கொண்டான் ரவி.

கிளம்பும் போது ராதா ரவியிடம், "அடுத்த படத்திற்கு வேறு ஹீரோயின் புக் பண்ணிக்கோங்களேன்.." என்றாள். ரவிக்கு புரிந்து விட்டது – டோனா மாறவில்லை.

About The Author