தயிர் பூரி

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – ஒரு கப்
புளித்த தயிர் – ஒரு கப்
ஐந்து பச்சை மிளகாய்களை உப்புடன் சேர்த்து இடித்த விழுது
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லித்தழை – சிறிது
பச்சைக்கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
பொறிக்கத் தேவையான எண்ணெய்.

செய்முறை:

* பச்சைக் கடலைப்பருப்பைக் கழுவி நீரில் ஊற வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு தயிருடன் சற்று நீர் சேர்த்து அடுப்பின் மீது வைக்கவும்.

* பச்சை மிளகாய் விழுதை சேர்த்து கொதி வந்தவுடன் அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் பதமாக வேக விடவும்.

* பிறகு நன்றாகக் கிளறி விட்டு பச்சைக் கடலைப்பருப்பை சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிப் போட்டு பிசைந்து சூடாக்கிய எண்ணெயில் வடைகளாக தட்டி பொறிக்கவும்.

About The Author

1 Comment

Comments are closed.