தைப் பொங்கல்!

தைப் பொங்கல் பொங்குது
தம்பி தங்கை பாருங்கள்

அரிசி வெல்லம் பாலுடன்
அருமையாக மணக்குது

பொங்கல் பானை கழுத்திலே
இஞ்சி மஞ்சள் தொங்குது

கரும்பு நல்ல உயரம்தான்
கடித்துத் தின்ன இனிக்குமே

அறுவடையில் வந்தவை
அவ்வளவும் புதியவை

மாடு செய்யும் உதவியை
மறந்திடாமல் வாழ்த்தணும்

சூரியனைக் கும்பிட்டு
சூடாய்ப் பொங்கல் சாப்பிடு!

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    புழுதி,எண்ணெய்ப்பசை நாற்றம் இவற்றைப் போக்க சிகைக்காய் தேய்த்துக் குளிக்கவேண்டும். நெல்லிக்காயை நீரில் இட்டுக் காய்ச்சிக் குளித்தால் தோலில் படியும் நச்சுத்தன்மை அகலும். இவை, வெண்ணெய் அளைந்த குணுங்கும்,விளையாடு புழுதியும்…..-என்று கண்ணனை நீராட அழைக்கும்போது பெரியாழ்வார் குறிப்பிடுவன.

Comments are closed.