தோழியரே தோழியரே (3)

தொட்ட நாள் முதல்
தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல்
வீரமாய் நின்று – வார்த்தை
மொட்டவிழ்த்துக் கேளுங்கள்

கேட்பது என்பது
எவருக்கும் பொது

நாளெல்லாம்
அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே
அதைப் போல

கேளுங்கள் தோழியரே

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம்
பெண்கள்

அதைக் கொடுத்துவிட்டு
அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும்
எழுதப் பட்டிருக்கின்றன

அந்தப் பயத்தில்
எவரேனும் முரண்டுபிடிக்கலாம்

அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும்
போக்கு அல்ல

O

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author

1 Comment

  1. சோமா

    புஹாரி….
    கவிதை ஒன்றுக்கொன்று முரண்படுவதாய் உணர்கிறேன். பெண்ணே போகாதே பின்னே…..என்று சொல்லிவிட்டு, கேள் அவனிடம் தொடர்ந்து கேள் உனக்கு வேண்டுவனவற்றை, கொடுத்துவிட்டு அல்லல்ப‌டுபவன்தான் அவன் என்பதில் தொடர்பு இல்லாததை உணர்கிறேன்.

    ஆனால் கவிதையில் மிகுந்த சமூக பொறுப்புணர்வு இருப்பதை புரிய முடிகிறது. அவன் யார்? எனக்குக் கொடுப்பதற்கு, நானே எடுத்துக் கொள்கிறேன் என்று பெண்கள் பெண்ணீய” முழக்கம் விடுத்தக் கடந்த பத்து ஆண்டிற்குள் விவாகரத்து வழக்குகள் குவிந்து சமூகம், குடும்பம் தொலைந்து தனிமனிதர்கள் நிற்கிறார்கள்.

    பெண் பிள்ளைகளுக்கு அம்மா சொல்லிக் கொடுக்க வேண்டிய விசயங்கள்..கவிதையாய் உங்களிடமிருந்து..ஆனால் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் எனும் கவலை எனக்கு….”

Comments are closed.