நட்பின் பொழுதுகள்

உன் பாதைகள் நோக்கியே
என் பாதங்கள் செல்வதை
நிறுத்த முடியாமல் தவிக்கிறேன்

உன் பேச்சு கேட்கவே
என் காதுகள் கூர்மையாவதைத்
தவிர்க்க முடியாமல் தோற்கிறேன்

நம் முகங்கள் இரண்டும்
நேரே பார்க்க மறுத்தாலும்
புன்னகைத்துக் கொள்வது உண்மை

நீயும் நானும் மகிழ்ந்து குலாவியதை
ஞாபக அடுக்குகளில் தேடி
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்

மீண்டும் கூட்டை வந்தடையும்
மென்மையான பொழுதுக்காக
அடிவாரமிட்டிருக்கிறதுது நம் ஊடல்.

About The Author

2 Comments

  1. kunashunthary

    நட்பின் பொழுதுகள் என்ற இக்கவிதை உண்மையில் என் உள்ளத்தை கொள்ளைக் கொண்டது.

Comments are closed.