நம்பிக்கைகள் (2)

வெளியிலிருந்து…..

1..HAJ-யாத்திரை – வருடந்தோரும் 25 லட்சம் பேர், மினா என்னுமிடத்தில் சாத்தான் மீது கல்லெறிகிறார்கள்..

2.CHRISTIANITY- 1. உக்ரைன்-கிறிஸ்துமஸ் அன்று சிலந்தியைக் கண்டால் அதிர்ஷ்டமாம்.

3. கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் SNOW FLAKE GIRL -ம் வருவதாக நம்பிக்கை.

4.ஆஸ்திரேலியாவில்…கிறிஸ்துமஸ் இரவு உணவுக்குப் பின் கிரிக்கெட் விளையாட்டு பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

5. எத்தியோப்பியாவில் திருப்பலியின் போது 3 மணி நேரமும் உட்காரக் கூடாதாம்.

6. போர்ச்சுக்கல்லில் இறந்த உறவினர்கள் அதிர்ஷ்டம் கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கையிருப்பதால் விருந்துகளில்
அவர்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்படும்.

7. நார்வே-சூனியக்காரிகள் திருடாமலிருக்கத் துடைப்பங்களை மறைத்து வைப்பார்கள்

8. எகிப்து நாட்டில் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஜனவரி 7 முதல் 40  நாட்கள் விரதம் இருப்பார்கள்.


நம்மிலிருந்து …

தெய்வ சாட்சிகள்….

1. வள்ளி மலை சுவாமிகள், முருகனிடம் திருப்புகழ் கேட்டவர்.

2. அருணகிரி சுவாமிகள், முருகனிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றவர்.

3. பாலசுப்பிரமணியக் கவிராயர் – பழநி ஸ்தல புராணம் வடித்த இவருக்கு முருகன் காட்சியளித்து அருள் செய்தார்.

4. சேலம்-வட சென்னிமலை-முருகன் கோவில் – இடும்பன் சந்நிதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஸ்ரீவாரு பாதம் பகுதி – இவ்விடங்களில் கற்களை அடுக்கினால், வீடு கட்ட முடியும் என்பது நம்பிக்கை.

5. மயிலின் அகவல் ஓசை, "குகா" என்று அழைப்பதைப் போல இருக்குமாம்.

6.கர்நாடக மாநிலம்-மங்களூர் – குகே சுப்பிரமணியர் கோவிலின் தேர் பிரம்பால் ஆன வடத்தால் இழுக்கப்படுகிறது. இப்பிரம்பு வடத்தை அரைத்துப் போட்டால், எவ்விதக் காயமும் குணமாகும் என்பது நம்பிக்கை.

7.வடலூர் – வள்ளலார் நிறுவிய ஞானசபையில் கண்ணாடி முன் 7 வண்ணத் திரைகள் கட்டப்பட்டிருக்கும்.
கருப்பு – மாயா சக்தி; நீலம் – கிரியா சக்தி; பச்சை – பராசக்தி ; சிவப்பு – இச்சா சக்தி; மஞ்சள் – ஞானசக்தி; வெள்ளை – ஆதி சக்தி ; அனைத்து வண்ணத் திரைகளும் சேர்ந்தது சித்தி. இந்த ஏழு சக்திகளைக் கடந்த பிறகே இறைவன் என்ற பெருவாழ்வை அடைய முடியும் என்பது நம்பிக்கை. தைப்பூசத் திருநாளன்று மட்டுமே அனைத்துத் திரைகளும் திறக்கப்பட்டு கண்ணாடியைப் பார்க்கலாம்.

8. சென்னை-மயிலாப்பூரில் உள்ள ரங்கா சாலையில் அமைந்திருக்கும் நந்தலாலா கோவிலில் சனிப்ப்ரீதி செய்ய குடைகள் வேண்டுதலாகப் பெறப்பட்டு , அவை பின்பு தேர்ந்ததெடுக்கப்பட்ட ஒரு கிராம மக்களுக்கு கிருஷ்ணப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

9. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை பெருமாள் கோவிலில் மிகப் பெரிய தோல் செருப்புகள் ஒரு ஜதை, கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதிது வைக்கப்பட்ட சில நாட்களில் (பெருமாள் உபயோகித்தது போல) பழையதாகி விடும். நேர்த்திக் கடன் செய்யும் பக்தர்கள் இப்பாதுகைகளைத் தலையில் வைத்துத் தடவிக் கொள்கிறார்கள்.

10. திருநெல்வேலி-நாகர்கோவில் சாலையில் நான்குநேரி அருகே பிரம்மாண்ட வராஹ ரூபத்தைச் சுருக்கிக் கொண்ட திருக்குறுங்குடித் தலம் அமைந்துள்ளது. பக்தனுக்காக இங்கு விலகி நிற்கிறது கொடி மரம். சிவனுக்குத் தனிச் சந்நிதி இங்கே உண்டு. சுவரின் பக்கம் பண்பர் திருமங்கையாழ்வார் காட்சியளிக்கிறார். இதனாலேயே, பக்கத்தில் நிற்கும் பக்தரிடம், அர்ச்சகர், "குறையேதும் உண்டோ?" என்று கேட்கும் பழக்கம் இன்றும் உண்டு.

11. ஜெய்ப்பூர் – இங்குள்ள 7,000 கோவில்களில் உள்ள விக்கிரகங்களுக்கும் குளிர் காலத்தில், வெதுவெதுப்பான கம்பளி உடைகளும், சூடான நைவேத்தியமும் படைக்கும் பாரம்பர்யம் உள்ளது. (D.C. 22.1.07)

12. (D.C. 22.1.07) மதுரை – அன்னையூர் கிராமத்தில் கருப்புசாமி கோவிலில் வளர்ந்து 17 வருடங்கள் சுற்று வட்டார ஜல்லிக் கட்டுகளில் கலந்து கொண்டு -கிராமத்தின் ஒவ்வொரு வீட்டாலும் முறை போட்டு உணவளிக்கப்பட்ட தங்கசாமி என்ற காளை மாடு 21.1.07 அன்று இயற்கை மரணமடைந்தது. ஊரே கூடி, மாலை அணிவித்து மனிதர்களுக்குச் செய்வதைப் போல சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது.

(தொடரும்)

About The Author