நம்பிக்கைகள் (3)

11.சேது சமுத்திரப் பாலம்

இராமர் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் வானர சேனைகளால் கட்டப்பட்டதாக நம்பிக்கை. இப்பாலம் NASA satellite-ஆல் காணப்பட்டது. இந்த இராமர் என்ற ஆடம்ஸ் பாலத்தை கப்பல் வழிப் போக்குவரத்திற்காக உடைக்க முற்பட்டபோது CST AQUARIUS என்ற தோண்டும் இயந்திரத்தின், 50 டன் எடை கொண்ட "ஸ்பட்" என்ற தோண்டும் பாகம் உடைந்து விழுந்தது. இதை மீட்க வந்த "தங்கம்" என்ற 150 டன் இயந்திரமும் உடைந்து விழுந்தது. இவையிரண்டையும் மீட்க, 200 டன் "அனுமன்" இயந்திரம் வரவழைக்கப்பட உள்ளது. தி.ம. 30.1.07

12. சிவன் மலை

ஈரோடு-காங்கேயம்-திருப்பூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிவன் அசுரர்களை அழிக்க இமயமலையை வில்லாக வளைத்தபோது சிதறிய துண்டு-அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது விழுந்த துண்டு இம்மலை என்பர். அடிவாரத்தில் அனுமன் சிலையும் உண்டு. இக்கோயில் இராமாயண காலத்திற்கு மற்றும் சூரன் வதத்திற்கு முற்பட்டது.
சிவவாக்கியருக்கு முருகன் அருள் பாலித்த தலம்

11-ம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன் மலைப் புராணம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், மயில் விடு தூது, சிவலைக் குறவஞ்சி ஆகிய நூல்களில் பாடப்பட்டது.

வடக்குப் பார்க்கும்(இந்திர) மயில்(ஏனைய முற்காலக் கோயில்களில் கிழக்குப் பார்க்கும் சூர மயில்) (ஆகவே சூரவதத்திற்கு முந்தைய கோயில் என்பர்). இங்குள்ள ஆண் தொரட்டி, பெண் தொரட்டி என்ற தல விருட்ஷங்கள் இன்னும் செழுமையாக உள்ளன. இவற்றின் அடியில் அமைந்துள்ள நவகன்னியர்களை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்குமென்பதும், இங்குள்ள ஜீரகேஸ்வரருக்கு மிளகு ரசம் வைத்துப் படைத்தால், ஜுரம் விலகும் என்பதும் நம்பிக்கை. மேலும் .பெரும்பாலோருக்குக் கனவில் வரும் பொருளை, இங்குள்ள பேழையில் வைத்துவிட்டால் அப்பொருள் முக்கியத்துவம் பெற்று விடும். உதாரணமாகத் தண்ணீர் வைக்கப்பட்டபோது, கடும் மழை பெய்தது. கத்திரிக்கோல் வைக்கப்பட்டபோது, சீர்திருத்தப் பணிகள், மருத்துவச் செலவுகள் ஏற்பட்டன. இங்குள்ள முருகனுக்குப் பூ போட்டுப் பார்த்த பின்னரே சுபகாரியங்கள் தொடங்கப்படும்.

13.கோவையை அடுத்துள்ள சுண்டக்காமுத்தூர் – மகாசிவராத்திரியன்று, இங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில், 24 மனைச் செட்டியார் வகையறா (கோலையார் வகுப்பு) நடத்தும் மயான பூசை. இடுகாட்டு எலும்புகளைத் தோண்டியெடுத்து, வாயில் கவ்விக் கொண்டு, ஆயிரக்கணக்கானோர் காண, தாரை தப்பட்டை உடுக்கை ஒலிக்க, நடத்தப்படும் நடுநிசிப் பூசை – மரணத்தை வெல்லும் என்பது நம்பிக்கை.

14.கோயில் நம்பிக்கை

1.இராமேஸ்வரம்…………… .குழந்தைப்பேறு
2.தஞ்சை-திருவிடைமருதூர் சித்த சுவாதீனம் தெளிதல்
மகாலிங்கசுவாமி…………………
3.தனுஷ்கோடி……………. . பாவ பரிகாரம்
4..தஞ்சை-திருப்புவனம் சரபேஸ்வரர்…. நோய், பயம் நீங்க
5..நாகை-திருக்கடையூர்… ஆயுள் விருத்தி
6..வைத்தீஸ்வரன் கோயில்……………சகல நோய், பிறவி பிணி தீர
7..நெல்லை-சங்கரன்கோயில். .சர்ப்ப தோஷம் தீர
8. திருப்பதி………………………சகல சவுக்கியங்களும் கிடைக்க.. ராகு தோஷம்
நீங்க, பயிர்ப் பாதுகாப்பு வேண்டி..
9.சமயபுரம் மாரியம்மன்… அம்மை நோய் நீங்க
10..நெல்லை பாபநாசம்………சகல பாவ நிவர்த்தி
11..திருவாரூர் திருவீழிமிழலை.. திருமணம் நடக்க
12..நாகை-திருமணஞ்சேரி…… .திருமணம் நடக்க
மன நோய் தீர

15. குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வேளிமலை பசுமலைச் சாரலில் அமைந்துள்ள முருகத் தலம் குமாரக் கோயில். இந்தக் கோயிலில் திருட வந்தவன், திடீரென்று எழுந்த மணியோசையால் பிரமை பிடித்து சிலை போலாகிப் பிடிபட்டதாக நம்பிக்கை

16. திருமாகறல்-காஞ்சி-உத்திரமேரூர் சாலையில் உள்ள சிவத் தலம். மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தவம் செய்ததால் இப்பெயர் பெற்றது. தினந்தோரும் மூன்று தங்க நிறக்கனிகளைக் கொடுத்த பலாமரம் இருந்த ஊர். மயிலைக்கும, தில்லைக்கும் போக மீதமான 1 கனியைத் தன்னிடம் தினமும் தேடி வந்து ஒப்படைக்க வேண்டுமென்ற இராஜ ராஜ சோழனின் கட்டளையை நிறைவேற்ற ஊர்ப் பெரியவர்கள் பட்ட சிரமத்தைக் காணச் சகியாத இளைஞனொருவன் மரத்தைத் தீயிட்டுக் கொழுத்தி விட, அதற்குத் தண்டனையாக அவன் கண்களைக் கட்டிக் காட்டைத் தாண்டிவிட்டு வர அரசன் கட்டளையிட்டான். அந்த இளைஞனின் கட்டுகள் தானாக அவிழ்ந்து ,அந்த இளைஞனுக்கு விடிந்த இடமே விடிமாகறல் என்ற ஊர்.

உடும்பாகச் சோழனுக்குக் காட்சி தந்த இறைவன், ஆவுடையாரின் மீது உடும்பின் வால் பகுதியாக வீற்றுள்ளார். சோழனின் அடியால் ஏற்பட்ட தழும்பு இந்த(வால்) லிங்கத்தின் மேல் இன்றும் தழும்பாக உள்ளது.

பக்தர்களின் மனத்தழும்பை மறையச் செய்யும் இத்தல ஈசன், நவீன மருத்துவத்தால் கை விடப்பட்ட அனைத்து எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளையும் தன் அருட் பார்வையால் நீக்குவதாக நம்பிக்கை.

17..விழுப்புரத்தில் இருந்து 38 கிமீ தொலைவில் திருக்கோயிலூர் -உலகளந்த பெருமாள் திருக்கோயில் உள்ளது. பெருமாளின் பாத தீர்த்தமே கோயிலுக்கு வடக்கில் பெண்ணையாறாக ஓடுவதாகவும், இத்தீர்த்தத்தைத் தொட்ட மாத்திரத்தில் பாவங்கள் விலகுமென்றும், நீராடினால் பரமபதம் கிடைக்குமென்றும் நம்பிக்கை.

18..சிவகங்கை-திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம்-சாபத்தால் கல்லாக மாறிய-அம்பா, துலா, நிதர்தத்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி- என்ற கார்த்திகைப் பெண்கள் சாப விமோசனம் பெற்ற குருதலம். 2000 வருட ஆல மரத்தின் அடியில் கிழக்குப் பார்த்து அருள் புரியும் தட்சிணாமூர்த்தி. திருவிளையாடற் புராணத்தில் பாடப்பட்ட தலம் இது. திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு உண்டாக வழிபடப்படும் தலம்.

19. குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்:
”களத்ரம் ஸுதா பந்துவர்க :பகர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா: 1
பஜந்தோ நமந்த:ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார
-சுப்ர மண்யபுஜங்கம்

(மீதி அடுத்த இதழில்)

About The Author