நவக்கிரகங்கள் (23)

நவகிரக ஸ்தோத்ர கிருதிகள்

3. செவ்வாய்

பல்லவி

அங்காரா மாசற யாம் யஹம்
வினதா ச்ரித ஜன மந்தாரம்
மங்கள வாரம் பூமி குமாரம் வாரம் வாரம்

அனுபல்லவி

ச்ருங்காராக மேஷ விருச்சிக ராஸ்யாதிபதிம்
ரக்தாங்கம் ரக்தாம்பராதி தரம் சக்தி சூல தரம்
மங்களம் கம்புகளம் மஞ்சுளதர பத யுகளம்
மங்கள தாயக மேஷ துரங்கம் மகரோத்துங்கம்

சரணம்

தானவ கர ஸெவித மந்தஸ் மித விலஸித பவக்த்ரம்
தரணி பரதம் ப்தார்ரு காரகம் ரக்த நேத்ர
திவ்யெளகாதி குரு குஹ கடாக்ஷானுக்ரஹ பாத்ரம்
பானு சந்த்ர குரு மித்ர மித்ரம் பாஸமான ஸூகளத்ரம்
ஜானுஸ்த ஹஸ்த சித்ரம் சதுர்புஜ மதி விசித்ரம்

கருத்துரை:

பூமா தேவியின் குமாரனும், செவ்வாய்க் கிழமைக்கு அதி தேவதையும், பக்தர்களுக்கு சுப பலன்களை அருள்பவரும், மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதியும், மேஷ (ஆடு) வாகனமுடையவரும், மகரத்தில் உச்ச ஸ்தானத்தை அடைந்தவரும், சிவந்த மேனி, சிவந்த ஆடை, சக்தி, சூலம் ஆகியவற்றை உடையவரும், அதிமிருதுவான பாதங்கள்உடையவரும், தேவர்களாலும், அசுரர்களாலும் பூஜை செய்யப்படுபவரும், புன் சிரிப்புடன் விளங்குகிற முகத்தை உடையவரும் பூமியை அருள்பவரும் சகோதரனை கொடுப்பவரும், வைத்யனாத க்ஷேத்திரத்தில் ஈசனை பூஜித்தவரும், குரு குஹனுக்கு கிருபை செய்பவரும், சூர்யன், சந்திரன், குரு ஆகிய மூவருக்கும் நண்பரும், பத்தினியுடன் விளங்குபவரும், நான்கு கரங்களுடன் முழங்காலில் கையை வைத்துக்கொண்டு, பிரகாசிக்கும் செவ்வாய் பகவானை சரணடைகிறேன்.

புதன்

பல்லவி

புது மாஸ்ரயாமி ஸததம் ஸூர வினுதம்
சந்த்ர தாரா ஸூதம்

அனுபல்லவி

புட ஜனைர் வேதிகம் பூஸுரைர் மோதிதம்
மதுர கவிதா ப்ரதம் மஹனீய ஸம்பதம்

சரணம்

குங்கும் ஸம த்யுதிம் குருகுஹ முதாக்ருதிம்
குஜ வைரிணம் மை மகுடஹார கேயூர
கங்கணாதி தரணம்
கமனீயதர மிதுன கன் யாதிபம் புஸ்தக கரம் நபும்சகம்
கிங்கர ஜன மாதிடம் கில்பிஷாதி ரஹிதம்
சங்கர பகட தம் ஸதானந்த ஸஹிதம்

குரு

பல்லவி

ப்ருதாஸ்பதே தாரா பதே ப்ரஹ்ம ஜாதே நமோஸ்து தே

அனுபல்லவி

மகா பல விபோ கீஷ்பதே மஞ்ஜூ தனுர் மீனாதிபதே
மஹே ந்த்ராத் யுபாஸி தாக்ருதே மாதவாதி வினுத தீமதே

சரணம்

ஸுரா சாரய வர்யா வஜ்ரதர
சுப லக்ஷண ஜகத் திரைய குரோ
ஜராடி வர்ஜிதாக் றோர கச ஜனகா ச்ரித ஜன கல்பதரொ
புராரி குருகுஹ ஸம்மோதித புத்ர காராக தீன பந்தோ
பாராட்டி சத் வாரி வா ஸ்வருப ப்ரகாஸக தயா ஸிந்தொ நி ராமயாய நீதி கர்த்ரே நிரங்குஸாய விஸ்வ பர்த்ரே
நிரஞ்ஜனாய புவன போக்த்ரே நிரம்ஸாய மக ப்ரதாத்ரே

கருத்துரை

பிரம்ம குலத்தில் உதித்துவரும் நட்சத்திரங்களின் அதிபதியும் மிகுந்த பிரகாசம் உடையவரும், தனுர் , மீன ராசிகளுக்கு அதிபதியும், இந்திரன் முதலானேரால் உபாசிக்கப் படுபவரும், விஷ்ணு, முதலியோர் துதிப்பவரும், புத்தி தீட்சண்யம் உடையவரும், தேவர்களுக்கும், மூவுலகங்களுக்கும் குருவானவரும், வஜ்ராயுதம் தரித்தவரும், நல்லா அழகு வாய்ந்து முப்பு ஒலிந்தவரும், கசனுடைய தந்தையானவரும் , ஆண்டினவர் வேண்டியதைக் கொடுப்பவரும், சுப்ரமண்ய சுவாமிக்கு சந்தோஷம் அளிப்பவரும், புத்திரனைக் கொடுப்பவரும், ஏழைகளைக் காப்பாற்றுபவரும், கருனில் கடலும், நியாயம் என்கிற சாஸ்திரத்திற்கு ஆசிரியரும், எல்லா உலகங்களையும் போஷிப்பவரும், பேச்சு வன்மையை அருளுபவருமான குரு பகவானுக்கு நமஸ்காரம்.

About The Author