நாய்கள் ஜாக்கிரதை – இசை விமர்சனம்

இயக்கம்: சக்தி சௌந்தர் ராஜன்
இசை: தரண் குமார்

ஹீரோ நம்ம

நாலு கால் நாயகனுக்கு அறிமுகப் பாடல். அதகளப்படுத்தியிருக்கிறார் மதன் கார்க்கி, கொஞ்சம் கூட குறை வைக்காமல் தன் குரலால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் கானா பாலா. இதுபோல் இப்படி ஒரு பாடல் வந்ததில்லை.. இனிமேலும் வருவது சந்தேகமே.

பாடல் துளி :

"பாசம் காட்ட நீயும் வந்த வாலாட்டி நிப்பான்டா
மோசம் பண்ண நீயும் பாத்தா பல்ல உன் மேல் வைப்பாண்டா"

என் நெஞ்சில்

தமிழ் சினிமாவில் விலங்குகளுக்கென பாடல்கள் முன்னர் வெளிவந்திருக்கலாம். இதும் அது போல ஒரு பாடல்தான். நாயகனுக்கும் நாய்க்குமான நெருக்கம்தான் பாடலின் களம். அழகான கவிதையாக்கியிருக்கிறார் கார்க்கி. முதல்முறை மேலோட்டமாக கேட்கும்போது ஏதோ வழக்கமான காதல் பாடல் எனத் தோன்றும். கவனித்துக் கேட்கும்போதுதான் இதன் உண்மை அர்த்தம் புரிகிறது. நரேஷ் குரலில் பாடலில் கூடுதல் உயிர்ப்பு. நிச்சயம் மனதைக் கொள்ளை கொள்ளும். எல்லா வரிகளின் முடிவும் “னாய்” என்கிற ஒலி வடிவம் பெற்று முடிவது ஒரு சிறப்பு.

பாடல் துளி :

"வாய் கொண்டு பேசாமால் உன் செய்கையால் நீ பேசினாய்
மார்பிலே மோதினாய் முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டெனை நீ பூட்டினாய்"

பூமி சுற்றும்

தரண் குமார் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியிருக்கிறார்கள், யுவனின் சில வெற்றிப் பாடல்களை நினைவுபடுத்தினாலும் கவனம் பெறுகிற பாடல் இது. படத்தின் இறுதிக் கட்டத்தில் ஒலிக்கும் பாடலாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. இதை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

தீம் மியூசிக்

எங்கோ கேட்டது போல் தோன்றினாலும், தன் பக்கம் ஈர்த்து முதல் முறை கேட்டதுமே அதை முணுமுணுக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது.

நாய்கள் ஜாக்கிரதை – கேட்போரைத் தாக்கும்

About The Author