பராத்தாக்கள்(1)

நாவிற்கு சுவை சேர்க்கும் வகை வகையான பராத்தாக்கள்

பதமாக பராத்தா மாவை பிசையும் முறை தான் சுவையான பராத்தாக்கள் தயாரிப்பதற்கு உயிர் நாடி எனலாம்.

கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு ஒரு கப், வறுத்த ரவை ஒரு கப் மூன்றையும் ஒன்றாக சலித்து சுவைக்கு உப்புச் சேர்த்து வெண்ணெய் நூறு கிராம், சோடா ஒரு சிட்டிகை சேர்த்துக் கலந்து சிறிது நீர் விட்டு நுரைக்கத் தேய்க்கவும். மாவுக்கலவையுடன் சேர்த்துக் குளிர்ந்த நீர் விட்டு நன்கு அடித்து மாவை மிக மென்மையாகப் பிசையவும். மாவை ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு உருண்டைகள் செய்யவும்.

டால்டாவையும், refined oil ம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு பராத்தாக்களைச் சுடவும். சிலவகை பராத்தாக்களுக்கு காய்கறிகள், பருப்பு, மசாலாக்களை மாவுடன் கலந்து பிசைந்து முடிந்த அளவு மெலிதாக சுடுவது நல்லது. செய்முறையை கவனித்து செய்வது நல்லது.

தால் பராத்தாக்கள்:

வேக வைத்து மசித்த துவரம்பருப்பு1/2 கப், வறுத்த கடலை மாவு – 1/4 கப், தனியா பொடி -1/4 tsp, வறுத்த சீரகப்பொடி -1/4 tsp, மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, மிளகாய்பொடி-1/4 tsp, தாளிக்க – கடுகு , பெருங்காயம் சிறிது , கறிவேப்பிலை. இவை எல்லாவற்றையும் மாவுடன் கலந்து மாவுடன் பிசைந்து பராத்தாக்கள் தயாரிக்கவும்.

மூங்க் பராத்தாக்கள்:

வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு -1/2 கப், பச்சை மிளகாய் விழுது -1/2 tsp, வறுத்த பெருங்காயப்பவுடர் – ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு 1/2 tsp. எல்லாவற்றையும் மாவுடன் கலந்து பராத்தாக்கள் தயாரிக்கவும்.”

About The Author