பாகற்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 2
பச்சை மிளகாய் – 4 (அ) 5
மஞ்சள் – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/2 மூடி
கடுகு – 1 தேக்கரண்டி (அரவை மற்றும் தாளிப்பதற்காக)
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
தயிர் – 2 (அ) 3 கப்
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஊற வைத்த பாகற்காயை பச்சை வாடை போகும்வரை வறுக்கவும். பிறகு அரைத்த கலவையை அதில் சேர்க்கவும். நன்றாக கொதித்த பின் பெருங்காயம் சேர்த்து இறக்கவும். நன்கு ஆறிய பிறகு தயிர் சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலை எண்ணெய் சேர்த்துத் தாளித்துக் கொட்ட வேண்டும்.”

About The Author

3 Comments

  1. Vanitha

    ஈ ட்ரிஎட் திச் ரெcஇபெ.இட்ச் யும்ம்ய் & Tஅச்ட்ய்.

  2. suganthe

    சூப்பர் பச்சடி செய்து பார்க்க வேண்டியதுதான்

Comments are closed.