பாபா பதில்கள்-ஆன்மீகம் வியாபாரமாகி பேராசைக்குத் துணை போகிறதா?

ஆன்மீகம் என்பது வியாபாரமாகி பேராசைக்குத் துணை போகிறது. உதாரணமாக பணம் கொட்டும் யந்திரங்கள் போன்றவற்றை பத்திரிகைகளுடன் இலவச இணைப்பாகத் தருகிறார்கள். இதற்கு தங்கள் கருத்து என்ன?

‘நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள் என்செயும்…..குமரேசர் இருதாளும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!’ என்பது ஆன்மீகம். பத்திரிகைகள் தங்கள் வியாபார வளர்ச்சிக்காகவும், விற்பனைத் திட்டங்களுக்காகவும் பல்வேறு பொருட்களை இலவச இணைப்பாகவோ, பரிசாகவோ தருவது நடைமுறை வழக்கத்தில் இருக்கிறபோது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு ஆறுதல் தருகிற யந்திரங்களையும், தகடுகளையும் தந்துவிட்டுப் போகட்டுமே. ஆனால் இந்த யந்திரங்கள், இறை நம்பிக்கையோடு அவரவர்களாக உட்கார்ந்து பூஜை செய்கிறபோது பலன் தருமேயன்றி ஃபோட்டோ போல மாட்டி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

About The Author