பாபா பதில்கள்-கடவுளின் அரவணைப்பு

கடவுளின் அரவணைப்பு

ஒரு ஆட்டு இடையன் இருக்கிறான். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது எல்லா ஆடுகளும், சாய்ந்தால் சாயற பக்கம் சாய்கிற செம்மறி ஆட்டுக் கூட்டம் மாதிரி அவனோடு கூடவே வரும். அதிலே கொஞ்சம் கால் முடமாக இருக்கிற ஆடு, உடம்பிலே எங்கேயாவது அடிப்பட்ட ஆட்டுக்குட்டி இருந்தால் அதை அவன் தோளிலே அல்லது கையிலே தூக்கிக் கொண்டு போவான். அப்போ, அந்த ஆட்டு இடையன், மற்ற ஆடுகளிடத்தில் கரிசனம் இல்லாமல் இருக் கிறான், அடிப்பட்ட ஆடுகிட்டே மட்டும்தான் கரிசனத்தோடு இருக்கிறான் என்று பார்க்கிறவர்களுக்கு தோன்றலாம்; ஆட்டு இடையனைப் பொறுத்த மாத்திரம் நன்றாக இருக்கிற ஆடுகளுக்கு, ஏதாவது குறை ஏற்பட்டால் அதற்கும் அந்த மாதிரி கரிசனம் காட்டுவான். கடவுளின் அரவணைப்பும் அப்படித்தான்.

It is the question of giving His time for a person who is more in need. அது கூட ஒரு வகையான அன்பும் ஆதூரமுமே தவிர, partiality என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

உலகத்து பாஷை

கடவுளுடைய பாஷை என்பது சப்தம் அல்ல, மௌனம். மௌனம் என்பதை எப்படி இரைச்சலிலே புரிய வைப்பாய்? மௌனத்தைப் பற்றி விவரிக்க முடியாது, because it has no semblance of noise effect. It has nothing to do with noise. மௌனம்தான் பெரிய பாஷை. அதை உள்ளேதான் உணர முடியும். வார்த்தைகள் இருக்கிற வரைக்கும் அது இரைச்சல்தான். வெளியே வந்தவுடனே இரைச்சல்தானே. மௌனம் என்பது universal. உலகத்தின் பொதுவான பாஷை மௌனம்தான். இதிலே யாருக்கும் யார் தயவும் தேவையே இல்லை. Últimately the world has to end up in silence one day. Silence is bliss. Silence என்பது வாய் வார்த்தைகளால் மட்டும் இல்லை; எண்ணங்களிலும் கூட மௌனமாக இருக்க வேண்டும். You have to silence thoughts. You have to silence the mind; silence the desires of the heart. அதுதான் total silence. இவற்றை silence செய்துவிட்டீர்கள் என்றால் அதன்பின் அமைகிற மௌனம் தான் divine.

மௌனம் மோனத்திற்கு வழி

Total silence என்பது blank mind.

கடலிலே நீந்தப் போனால் இரண்டு மைலுக்கு அலையும் சுழலும் இருக்கும். இரண்டு மைல் தாண்டி போய்விட்டால் அப்புறம் நிச்சலனமாக இருக்கும். அலையும் சுழலும் இல்லாமல் நிம்மதியாக போக முடியும்.

It becomes relevant only when you are talking of silence. Now you are in the process of attaining silence or becoming ‘silence’. The earlier you choose this path, the faster you attain.

About The Author