பாபா பதில்கள்-கடவுளுயடைய பக்தரா, கடவுளுடைய தூதரா, கடவுளா?

நீங்கள் கடவுளுயடைய பக்தரா, கடவுளுடைய தூதரா, நீங்களே கடவுளா?

வள்ளல் ராமலிங்க அடிகளார் என்ன சொல்கிறார் என்றால் இந்த உலகத்தை எதற்காக இறைவன் படைத்தான், எதற்காக என்னை வருவித்தான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிற போது புறத்தே வெளுத்து அகத்தே கறுத்த ஜகத்தைத் திருத்தி சன்மார்க்க சங்கத்தை இருத்த இறைவனால் நான் வருவிக்கலுற்றேன். உலகத்திலே மக்களுக்கு வெளிச்சத்தை காட்டுவதற்காக இறைவனிடமிருந்து வந்திருக்கிறார். அப்போ கடவுள் என்ன சொல்கிறார் என்றால் ‘பேய்பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை மதங்களாலே என் மக்கள் மாண்டுபோயினார்’- பேயும் பிடித்து பயித்தியமும் பிடித்த மாதிரி என் மக்கள் மாண்டுபோயினார். ‘இச்செயல் விரைந்து புரிக என இட்ட குருவே’ என்றார். இதை போய் நீ விரைவாக செய் என்று சொன்னார்.

இவர் பயந்துபோய் நிற்கிறார். இந்த உலகம் எவ்வளவு பெரியது. எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள். நான் போய் சொன்னால் அவர்கள் கேட்பார்களா என்று நினைத்துக் கொண்டு நிற்கிறார். அப்போது ‘அஞ்சலை அஞ்சலை, யாம் அருளொளி தருகிறோம். இக்கோனை மாநிலத்தார் நின்னையே குறிக்கோளாய்க் கொள்வர்’ என்று சொல்கிறார். இறைவன் சொல்கிறார் பயப்படாதே நான் உனக்கு பவர் கொடுக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள மக்கள் நீ சொல்வதை ஏற்றுக் கொள்ளுகிற மாதிரி நான் உருவேற்றி வைக்கிறேன் என்று சொல்கிறார். அப்பவும் அவர் பயந்து போய் நிற்கிறார். அப்போது இறைவன் கோபமாக ஆணை ஆணை என்று சொல்கிறார். நீ போயே ஆகணும். இது என்னுடைய order என்று சொல்கிறார்.

இந்த உலகத்தில் உள்ள எல்லாரையும் ஏதோ ஒரு திருப்பணிக்காக ஒன்று சேர்க்கிற ஒரு திருப்பணிக்காக இறைவன் எனக்கு, ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்’- என்ற நிலையில் எனக்கு இந்த அறிவு எல்லாம் கொடுத்தது அந்த இறைவனுடைய வேலையை செய்வதற்காக என்ற நிலையில் இந்த வாழ்க்கையில் பல்வேறு விதமாக புடம் போடப் பட்டு இன்றைக்கு இறைவனுடைய கருவியாக நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதாவது ‘காரணம் காரியம் கற்றவை அனைத்தும் நற்கரிசை நாரணன்’ -எல்லாமே இறைவன் தான். அவனுக்கு இப்போ பேசறதுக்கு ஒரு மைக், லௌட் ஸ்பீக்கர் தேவைப்படுகிற மாதிரி ஒரு பக்குவமான கருவி தேவைப்படுகிறது. அந்த பக்குவி என்பது கூட அவன் கொடுக்கிறது தான். நம்மால முடியுமா அது? அதனால் தேவாரத்திலே ஒரு வரி வரும். எனை தடுத்து அடிமைக் கொண்டு- அதாவது ஒரு மனிதனை இறைவன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தடுத்தாட் கொள்கிறான். என் பழவினை அறுத்து- என் கர்மாவை எல்லாம் அவனே கழிக்கின்றான். மூன்றாவது தன்னை நினைந்துருகத் தருகின்றான்- அவனையே நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி செய்கின்றான். அதற்கப்புறம் கடவுளைத் தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் வேண்டாம். அவன் தான் இந்த உலகத்தில் நிஜமான வஸ்து. அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்கிற ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் லயப்படுகிறான். அந்த நிலைக்கு இறைவன் என்னைப் பக்குவப்படுத்தி இன்னிக்கு என்னை கொண்டு வந்திருக்கிறான்.

கடவுள் என்பது நீங்களும் தான், நானும் தான். Ego- வை விடுவதுதான் ஆன்மீகம். நான் ஏதோ பெரிய இடத்தில் இருக்கிற ஆள். நீ என்கிட்ட பிரசாதம் வாங்கினால் தான் உருப்படுவாய் என்று சொல்வது அல்ல ஆன்மீகம். இந்த உலகத்தில் எல்லாரிடத்திலும் ஆண்டவன் இருக்கிறான். அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதைப் புரிந்து கொள்வது தான் ஆன்மீகம். so, யார் ஒருவன் தன்னிடம் இருக்கிற அந்த இறையாற்றலை உணர்ந்து கொள்கிறானோ – இப்போ நாம் சுவிட்ச் போட்டால் தானே விளக்கு எரியும். அதனால் நாம் தான் அந்த பிரயத் தனத்தில் ஈடுபட வேண்டும். ஒருத்தர் டாக்டர் ஆக வேண்டும் என்றால் மெடிக்கல் காலேஜ் போக வேண்டும். ஒரு இறை தூதுவன் ஆக வேண்டும் என்றால் அதற்காக சில பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி பயிற்சிகளை நாம் மேற்கொள்ளுகிறபோது நம்மிடத்தில் உள்ள அந்த இறைத்தன்மை மேலோங்குகிறது. அதை வைத்து நாம் நாலு பேருக்கு நல்லது செய்ய முடிகிறது. ஒரு டாக்டருக்குப் படித்தவுடனே நாலு பேருக்கு ஆபரேஷன் செய்யலாம். எனவே நம்மிடத்தில் உள்ள மெய்ஞானத்தை வெளிக்கொணர்ந்தவுடனே அதன் தொடர்பான எல்லா வேலையும் நம்மாலே செய்ய முடியும்.

உண்மையான ஆன்மீகத்தைப் பற்றி தாயுமானவர் என்ன சொல்கிறார் என்றால் எக்கோலம் கொண்டால் என்ன, ஏது அவஸ்தை பட்டால் என்ன, முக்தர் மனமிருக்கும் மோனத்தே- அவன் எப்படி இருக்கான் என்று பார்க்கக் கூடாது, அவனது எண்ணம் எங்கே இருக்கிறது என்று பார் என்று சொல்கிறார். அவன் தன்னுடைய உள்ளத்தை எப்போதும் இறைவனுடைய திருவடியில் வைத்திருந்தால் அவன் தான் ஞானி. நிலையின் திரியா அடங்குதல் தான் ஞானம். அதுதான் highest thing. உலகத்து ஜனங்க மாதிரியே இருக்கணும். அவங்க மாதிரியே சாப்பிடணும். அவங்க கூடவே இருக்கணும். அவங்களுக்கு நாம் தொண்டு செய்து கொண்டு இருக்கணும். இதுதான் definition of ஆன்மீகம்.”

About The Author