பாபா பதில்கள் – கர்மயோகம்

கர்மயோகம்

ராஜயோகம் என்பது தியானத்திலே இருப்பது. கர்மயோகம் என்பது நாம் செய்கிற வேலையில் ஆழ்ந்துவிடுவது. நாம் செய்கிற எதனாலேயும் நமக்கு எந்த லாபமும் இருக்கக் கூடாது. ‘நான் இட்லி சாப்பிட்டேன், தோசை சாப்பிட்டேன்’னா அதனாலே ஒன்றும் இல்லை, அது கர்மா. நீ செய்கிற எந்த காரியத்தினாலும் உனக்கு லாபமே இருக்கக் கூடாது. அதுதான் கர்மயோகம்.

Elevation வேறு. salvation வேறு. Elevation என்பது 7ஆம் கிளாஸ்லேந்து 8ஆம் கிளாஸ் போகிறது. Salvation என்றால் இனிமேல் வரவே வேண்டியதில்லை, total ஆக முடிந்து போச்சு என்று அர்த்தம்.

இந்த அமைப்பைப் பொறுத்தமாத்திரம் if you have come here, you are entitled for salvation. It is for you to understand that and elevate yourself. First you have to elevate yourselves; அப்புறம் தான் salvation. உபாயம் கடவுளுடைய திருவடி. உபாயம் என்பது அந்தக் கடவுளுடைய திருவடிக்கு செய்கிற கைங்கர்யம்.

ஏதோ ஒரு வகையிலே கைங்கர்யம் செய்யணும். ஏன் கைங்கர்யம் செய்யணும்? கர்மா என்பது ஆத்மாவிற்கு இல்லை. கர்மா என்பது சரீரத்திற்குத்தான். எந்த சரீரம் கர்மாவை சம்பாதித்ததோ அந்த சரீரத்தை நாம் யோகத்தில் நிலை நிறுத்துகிறபோது அதிலே கர்மா கழிகிறது.

வாலறிவு

இந்த உலகத்தில் எல்லாவற்றையும் கட்டிக் காப்பாற்றுகிற, எல்லாவற்றையும் அதனுடைய போக்கிலே கொண்டு செல்லுகிற ஒரு பேரருளாற்றல் இருக்கிறது. ஒரு பேரருளாளன் இருக்கிறான். ஒரு பேரறிவாளன் இருக்கிறான். அந்த அறிவுக்குப் பெயர் வாலறிவு. அந்த அறிவை நீ நம்பிவிட்டால் உன்னுடைய அறிவைப் பற்றி உனக்கு கவலை இல்லை. அவனுடைய அருளை நீ நம்பிவிட்டால் உன்னுடைய ஆற்றலைப் பற்றி உனக்கு கவலை இல்லை.

About The Author