பாபா பதில்கள்-கர்மா

கர்மாவை suppress பண்ணிவிட்டு ஞானத்திற்கு வந்துவிடாதே. கர்மாவை முடித்துவிட்டு குப்பையை எல்லாம் தூக்கி போட்டு ஞானத்திற்கு வந்தால் நீ ஜாலியாக இருப்பாய். இருந்தபடி இருங்கோள் வெகுளியை விடுங்கோள் – தாயுமானவர். நன்றாக குடும்பம் நடத்து. ஒழுங்காக வேலை செய். பிசினஸ் செய்கிறாயா, நன்றாக பிளான் செய்து செய்ய வேண்டும். வெகுளியை விடுங்கோள்- கோபம் வரக் கூடாது. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். கோபத்தினால் உன் நண்பர்கள், சொந்தம், பந்தம் எல்லாமே இழந்துவிடுவாய்.

நிறைய பேர் குடும்பத்தில் நிம்மதி இல்லை என்கிறார்கள். கணவன், மனைவி இரண்டு பேரில் யாரோ ஒருவருக்கு கோபம் இருக்கிறது, அகங்காரம் இருக்கிறது. அதனால், இருக்கிற நிம்மதியை தாங்களாகவே இழந்து கொண்டு அதற்காக சாமியாரிடம் ஜோசியம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். Be quiet, be more and more silent and talk less. கெட்டதைப் பார்க்கமாட்டேன்; கெட்டதை சொல்லமாட்டேன்; கெட்டதை செய்யமாட்டேன். நல்லதுக்கு பிறகு வா. நல்லன செய்தல் அற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின். உன்னால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; கெட்டது மாத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும்.

உனக்கு பத்தாயிரம்தான் கடன் என்று வைத்துக் கொள். அந்த பத்தாயிரத்தோட நின்று விட்டால் வம்பே இல்லை. இன்னமும் கடன் வாங்கிக் கொண்டே இருந்தால், அது ஒரு லட்சம் வரை போய் கொண்டே இருக்கும். இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு பத்தாயிரத்தை கழித்துவிடலாம். கர்மா கூட கடன்தான். அதனால் நாம் என்ன செய்யவேண்டும்? கெட்டதைப் பார்க்கக் கூடாது. அப்போ புது கடன் வாங்கவில்லை என்று அர்த்தம். கெட்டதை பேசக் கூடாது. கெட்டதை செய்யக் கூடாது. ஏற்கனவே ஏதோ ஒரு ஜென்மாவில் சேர்த்த கர்மா இருப்பதை கழித்துவிடலாம். கர்மா சேராமல் இருந்தாலே, கொஞ்சம் கொஞ்சமாக தானாகக் கழிந்துவிடும். நம்மை படைத்த கடவுளுக்கு நம் மேல் கருணை அதிகம். மனிதனாகப் பிறந்திருப்பதால் நல்ல விஷயங்களை கேட்க முடிகிறது. பேச முடிகிறது. இந்த மாதிரியான rational mind கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் பெரிய blessing. ஆனால் அதுதான் நம்மை குழப்பிவிடுகிறது. அரிது அரிது மானிடர் ஆதல் அரிது என்கிற நிலையை உணருகிற போது நமக்கு next step தானாக வந்துவிடும்.

நிறைய ஆன்மீக மையங்களில், எப்போதும் மோட்சத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நான் அதையெல்லாம் சொல்வதில்லை. என்னுடைய logic ரொம்ப சிம்பிள். நீ ஏதோ நல்லது செய்ததால் தானே இந்த பிறவியில் கண், காது, வாய், மூக்கு எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது. நல்லா டிரெஸ் செய்து கொள்கிறாய். இங்கு வந்து போவதற்கு உனக்கு பணம் இருக்கிறது. இவ்வளவு அழகான ஒரு இடத்தில் உட்கார்ந்து பாட்டு கேட்க முடிகிறது. ஏதோ ஒரு பூர்வ புண்ணியம் இருக்கிறது. அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? தெரியாத மோட்சத்தைப் பற்றி இன்றைக்கு கவலைப்படக் கூடாது. நல்லது செய்ததனால் இன்றைக்கு நன்றாக இருக்கிறோம். இன்னும் நல்லதை பார்த்துக் கொண்டே இருப்போம், நல்லதை கேட்டுக் கொண்டே இருப்போம், நல்லதை செய்து கொண்டே இருப்போம். இன்னொரு பிறவி வராது. ஒரு வேளை வந்துவிட்டால் நீ இன்றைக்கு இருப்பதை விட அடுத்த ஜென்மத்தில் இன்னும் நன்றாக இருக்கப் போகிறாய். அவ்வளவுதான்.

40 மார்க் வாங்குகிறவனிடம் 100 மார்க்கைப் பற்றி பேசாதே. ‘இன்னொரு 4 முறை எழுதுப்பா. இன்னமும் மூன்று டெஸ்டு பேப்பர் பாருப்பா. உனக்கு 50 மார்க் வரும்’ என்று சொல். அவனால் அது முடியும். நூறு மார்க் பற்றி பேசினால் அவன் வழிக்கு வரமாட்டான். ஒரு basic formula வைத்துக்கொள். அதில் 100க்கு 100 வாங்கினால் பிறவியில்லாமல் போய்விடலாம். So don’t add anything negative. Always thank God for whatever he has done for you already. உனக்கு கடவுள் ஏற்கனவே செய்திருக்கிற நல்லது இருக்கிறதே அதை நீ புரிந்து கொண்டு இந்த நன்மையை வளர்த்துக் கொள்வதற்கான பிரயத்தனத்தில் ஈடுபடு. எதையும் விட்டு ஓடாதே. வாழ்க்கையில் நல்லதும் வரும்; கெட்டதும் வரும். எல்லாவற்றையும் face பண்ண வேண்டும். அப்போதுதான் கர்மா கழியும். எந்த ஒரு வினையும் அனுபவிக்காமல் கழிந்துவிடாது. உனக்கு சளி இருந்தால், அதை சிந்தினால்தானே போகும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கிறது என்றால், அதை வெளியில் துப்பினால்தானே போகும். கர்மாவும் அப்படித்தான். கர்மா என்பது அனுபவிப்பதற்காக வந்தது. அனுபவித்து தீர்த்துவிடு.

தெய்வம் நமக்குத் துணை. ஒரு தீங்கும் வரமாட்டாது. கடவுள் நம் கூடவே இருக்கிறான். நமக்குள்ளேயே இருக்கிறான். நம்மை ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நாம்தான் அவனைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அவனை நீ உள்ளே கூப்பிட வேண்டும். ‘எனக்குள் இருக்கிற உனக்கு, நான் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டும். அதனால், என்னுடைய கர்மாவை எல்லாம் சீக்கிரம் கழித்துவிடு’ என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

About The Author