பாபா பதில்கள்-திருத்தல யாத்திரை

ஆன்மீகத்தில் நீங்கள் உயர்நிலைகளை அடைவதற்கு திருத்தல யாத்திரை எல்லாம் உதவும். சரி திருத்தல யாத்திரை போவதினாலே சாமி தெரிந்து விடுமா கயிலாயத்திலும் பழனி மலையிலும், திருப்பதியிலும் என்றால் கிடையாது. நீ கூட தான் திருப்பதிக்கு 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிண்டு லைன்ல நின்று போகிறாய். என்னிக்காவது சாமியை கையிலே சங்கு சக்கரம் வெச்சிண்டு பார்த்திருக்கிறாயா? சிலையாக பார்த்திருக்கிறாய். உண்மையாக ஒளி வடிவத்திலே பார்த்திருக்கிறாயா? எத்தனை இடத்திற்குப் போனாலும் கூட உனக்குள் இருக்கிற அந்த ஜோதி வெளிப்படாத வரையில் அந்தக் கள்ளப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்கிற வரையில் சாமி எதிரிலே நின்னாலும் கூட உன்னால் சாமியைப் பார்க்க முடியாது நீ எங்கே வேண்டுமானாலும் போய்ப் பார். அப்போ அந்த கள்ளப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்கிற நிலையிலிருந்த நீ உன்னை மேலோங்கச் செய்கிற போது ‘நற்றவத்தார் உள்ளிருந்து ஓங்கும் அந்த நமசிவாய பரம்பொருள்’ வருகிற போது, நெருப்பென்ன நின்ற நெடுமால் எழுகிற போது, அழலென்ன நின்ற அண்ணாமலையார் உனக்குள்ளே வருகிற போது அந்த ஜோதியிலே உனக்குக் காணாத காட்சி எல்லாம் தெரியும். அந்த நிலையை அடைகிற வரைக்கும் இதெல்லாம் செய்து தான் ஆகணும். க்ஷேத்திராடனம் பண்ணித் தான் ஆகணும். பூஜை புனஸ்காரம் பண்ணி தான் ஆகணும். ஏன்னா உன்னாலே திடீர்னு உட்கார்ந்து இடத்திலே ஒடுக்கிட முடியாது உன்னுடைய எண்ணத்தை. இந்த மாதிரி போகிற போது உலகத்தைப் பற்றிய உன்னுடைய கண்ணோட்டம் பரந்துபடும். You will get a wider spectrum of world and exposure.

தெய்வம் நம்மைத் தேடி வரக்கூடிய அளவிற்கு பக்குவத்தையும் தகுதியையும் நம்மால் அடைய முடியும். பாசிபிள்தான். அந்த மாதிரி உயர்நிலைகளை உண்மையாக நீங்கள் அடைந்த பின்னால் யாரை நீங்கள் impress பண்ணனும். உனக்கு சாமியாலேயே ஒன்றும் காரியம் ஆக வேண்டியதில்லை. இன்னும் சாதாரண ஜனங்களை impress பண்ணி உனக்கு என்ன ஆகணும். ஆன்மீகத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘அஞ்சாமை’. நீங்கள் தப்பு பண்ணாத்தானே பயப்படணும். தப்பே பண்றதில்லை. இன்னும் ஏன் பயப்படணும். யாருக்குமே பயப்படத் தேவையில்லை. இந்த உணர்வுகள் தான்
ஆன்மீகத்தினுடைய Ultimate levels. எங்கியுமே போகத் தேவையில்லை. எதுவுமே பண்ணத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே எந்த சாமியைக் கூப்பிட்டு எதிரிலே நிற்க வெச்சிட்டு எனக்கு ஒன்றும் தேவையில்லை. உண்மையாக எனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னா இவங்களுக்கு செய்துட்டு போய்யா அப்படின்னு சொல்லலாம். உனக்கு ஏதாவது வேணுமா என்றால் எனக்கு ஒன்னும் வேணாம். இவங்க என்னை நம்பிண்டு இருக்காங்க அவங்களுக்கு செய் என்று சொல்லலாம். இந்த நிலையை அடைவது சாத்தியம் தான். பாம்பன் சுவாமிகள் இந்த நிலையை அடைந்திருந்தார்.

பாம்பன் சுவாமிகள் முருகரிடத்தில் இதைத்தான் சொன்னார். முருகா என்னைக் கைவிட்டாலும் என்னை நம்பினாரை கைவிடேல். நீ என்னை கைவிட்டால் பரவாயில்லை. என்னை நம்பியவர்களை நீ கைவிட்டு விடாதே. அருணகிரிநாதருடையது இதை விட ஒரு ஸ்டெப் மேலே. நான் உனை விடா நிலையும் நீ எனை விடா நெறியும் யான் வேண்டுவதாம். நான் உனை விடாமல் இருப்பது என்பது ஒரு ஸ்டேஜ்- ஒரு நிலை. நீ எனை விடா நெறியும்- அது உன்னுடைய தர்மம். How can you ever leave me? How can you ever forsake me? That is your duty.That is your discipline– அப்படினு சொல்கிறார். இது இன்னொரு நிலை.
மூன்றாவது, இரண்டுமே கரைந்து போவது. அது ஆழ்வாருடைய நிலை. என்னைக் கொண்டு உன்னிலிட்டேன். உன்னையும் என்னிலிட்டேன். அவ்வளவு தான். என்னைக் கொணர்ந்து உன்கிட்ட வெச்சேன். உன்னையும் என்கிட்ட வெச்சேன். இரண்டுமே கரைந்துபோச்சு. நான் வேறு எனாதிருக்கும் நீ வேறு எனாதிருக்கும் பவதீதம் என்று சொல்லக்கூடியது.

About The Author

1 Comment

  1. c.r.davi

    ஆம் உன்மை ஆன்டவரெக் நே என்னை கைவிட்டலும் என்னை நம்பியவரை கை விடதேர்.

Comments are closed.