பாபா பதில்கள்-வாழ்க்கையில் வெற்றி என்பது முக்கியமான இலக்கா?

Q. வாழ்க்கையில் வெற்றி என்பது முக்கியமான இலக்கா?

வெற்றியை நாம் அடையணும் என்று நினைப்பது எதற்காக? சந்தோஷமாக இருப்பதற்காக. உனக்கு பாரத ரத்னா அவார்டு கொடுக்கிறாங்க. அதைக் கொடுத்திட்டு உன்னைக் கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் ஒரு ரூம்ல பூட்டி வைச்சிட்டாங்கனு வை, உன்னுடைய பாரத ரத்னா விருதால் உனக்கு சந்தோஷம் கிடைக்குமா? When you share the success with your own circle of friends and relatives you get a reciprocal joy. வெற்றியினுடைய கண்ணுக்குத் தெரியாத இலக்கு என்னன்னா, அதனால் நமக்கு கிடைக்கிற மகிழ்ச்சி. That joy comes out of self esteem.. நம்மைப் பற்றிய பெருமிதம் நமக்கு வருவதனால் அந்த வெற்றியில் ஒரு கிக் இருக்கு. மகிழ்ச்சியைத் தராத எந்த வெற்றியும் அவசியம் கூட இல்லை. கஷ்டப்பட்டு வெற்றியைப் பெற்றிட்டு அதில் சந்தோஷமே வராது என்றால் அதில் என்ன லாபம் இருக்கு?

இதுக்கு முன்பு கூட இதேமாதிரி கேள்வி வந்தபோது நான் சொன்னேன். பெரிய கார் ரேஸ் நடந்துக்கிட்டிருந்தது. அதில் ஒரு ஆள் கட்டாயம் முதலில் வரப்போறான், வெற்றி பெறப்போறான்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருந்தாங்க. அவன் ரொம்ப வேகமாக அவனுடைய காரில் வந்துக்கிட்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்துக்கிட்டிருந்த கார் ஏதோ டெக்னிகல் பிராப்ளத்தினால் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த இடத்தில் இவன் மட்டும்தான் இருக்கான். மற்றவங்க அந்த இடத்திற்கு வருவதற்கு நேரமாகும். இவன் கஷ்டப்பட்டு தன்னுடைய காரினுடைய வேகத்தை குறைச்சு தன்னுடைய காரிலிருந்து அந்த காருக்கு குதிச்சு அதிலிருந்தவனை, சாகக் கிடக்கிறவனை வெளியே கொண்டு வந்தான். எல்லாரும் இவன்கிட்டே, ‘நீதான் இந்த கார் ரேஸில் முதலில் வருவேனு நினைச்சுக்கிட்டிருந்தோம். நீ ஏன் அவனைக் காப்பாத்தப் போய் உன்னுடைய வெற்றியை இழந்திட்டே?’ னு கேட்கிறாங்க. இவன் சொல்றான், ‘இந்த முறை முதலில் வரலைன்னா என்ன, அடுத்த தடவை வந்திடுவேன். ஆனால், இழந்த ஒரு உயிரை என்னால் இன்னொரு தடவை காப்பாற்ற முடியாது’னு.

அப்போ, வெற்றிதான் இலக்குன்னு சொன்னால், இந்த நிகழ்ச்சியில் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால், ‘நம்ம கண் முன்னால் சாகக்கிடந்தவனை காப்பாற்றாமல் சாகடிச்சிட்டோமே’ என்ற குற்றவுணர்ச்சியில் எப்போதும் துக்கம் வந்திருக்கும். இதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டால், புரியும். நான் சொன்ன மாதிரி, வெற்றியினால் மகிழ்ச்சி வராத பட்சத்தில் அந்த வெற்றியினால் லாபம் ஒன்றுமில்லை.

About The Author