பாபா பதில்கள் – வாழ்க்கை அநித்யமானது

வாழ்க்கை அநித்யமானது

பட்டினத்தார் ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறார். ஒரு வீட்டில் சாவு. அந்தப் பிணத்தின் மேல் எல்லாரும் விழுந்து அழுது கொண்டிருக்கின்றார்கள். பட்டினத்தாரும் அங்கே போய், ‘ஓ’ன்னு அழறார். எல்லாரும் கேட்கிறாங்க, ‘என்ன சாமி, இறந்து போன ஆள் உங்களுக்கு ரொம்ப சொந்தமா?’ன்னு. அவர் சொன்னாராம், செத்தப் பிணத்தைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுமாப்போல். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. அவன் செத்துப் போயிட்டான். நீங்கள் எல்லாம் கூட ஒருநாள் சாகப்போறீங்க. அப்ப நான் எங்கயிருப்பேன்னு தெரியாது. அதனால், உங்களுக்கும் சேர்த்து இப்போதே அழுதுவிட்டு போயிடறேன்’னு சொன்னாராம். சாகக் போகிற பிணங்கள் செத்துப் போன பிணத்தைப் பார்த்து அழுதுகிட்டு இருந்ததாம். அதைத்தான் இந்த உலகத்தில் நாம் பார்க்கின்றோம்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

நமக்குள்ளே இருக்கிற ஆத்மா. அது உன் கூடவே வரப் போகிறது. அதை நீ கவனிக்கவேயில்லை. அடுத்த பிறவிக்குக் கூட அதுதான் வரும். இவ்வளவு தான் வாழ்க்கை.

அதனால் நாம் Care பண்ண வேண்டியது எதற்கு? ஆத்மாவிற்கு. ஏன்னா, அது ஒன்றுதான் நம்மகூட எப்பவும் வந்துகொண்டிருக்கும். இந்த உடம்பு போயிடும். அடுத்த பிறவியில் நாம் கருப்பா, சிவப்பா, கண், காது, ழூக்கு, கை, கால் வேலை செய்யுமான்னு தெரியாது. எப்படி வேண்டுமென்றாலும் பிறக்கலாம். ஆத்மாவை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதை எப்படிக் காப்பாற்றுவது?

சென்னையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் போகிறாய். ரயிலில் ஏறினவுடன் உன்னுடைய ஷூவை கழட்டிவிட்டு ஹவாய் செருப்பை எடுத்து மாட்டிக்கொள்வாய். பேண்ட் கழட்டிவிட்டு லுங்கி கட்டிப்பாய். உன் வீட்டம்மா உனக்கு பூரி கட்டிக்கொடுத்திருக்கும். அதை சாப்பிட்டுட்டு தண்ணி குடிப்பாய். மறுநாள் காலைக்கு மிளகாய் பொடி தடவின இட்லி கட்டிக் கொடுத்திருக்கும். பார்சல் மேலேயே எழுதியிருக்கும் டிபன்னு. மதியம் புளிசாதம் எல்லா கரெக்டா சாப்பிட்டிருப்பாய். டெல்லியில் போய் இறங்க போகிறாய். ஒரு 2 நாள் இரயிலில் போவதற்கு, நீ தயிர் சாதம், புளிசாதம், மிளகாய் பொடி தடவின இட்லி, பூரி, செருப்பு, லுங்கி எல்லாம் ரெடியாக வைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால், இங்கிருந்து ஆகாசத்துக்குப் போகப்போகிறாயே, அந்த பெரிய பிரயாணத்துக்கு இதுவரைக்கும் ஒரு கட்டுசாதமும் ரெடி பண்ணலையே! என்ன கட்டுசாதம் ரெடி பண்ணி வைச்சிருக்கோம்? அந்த கட்டு சாதம்தான் நாம் செய்கிற பூஜைகள், நாம் செய்கிற பக்தி. இதெல்லாம் ரெடி பண்ணினால்தான் அந்த பெரிய பிரயாணத்திற்கு எல்லாம் தயாராக இருக்கும்.”

About The Author

1 Comment

  1. யாகவா

    இந்த் கருத்துக்கள் அனைத்தும் நன்று! அதி எள்ளளவும் மாற்றமில்லை. எல்லா ரிஷிகளும், ஞானிகளும், யோகிகளும், சாமியார்களும், பக்திமான்களும் சொல்லும் கருத்துக்கள்தான். ஆனால் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் புது உணர்வுகள் தட்டி எழுப்பப்படுகின்றன.

Comments are closed.