பாபா பதில்கள்

இரக்கத்தினால் இறங்கி வருகிறேன்:

ஒருவன் மலை உச்சியை ஏறி விட்டான் என்று வைத்துக்கொள். எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி இருப்பான்! உயிரை பணயம் வைத்து, கம்பியை அப்படியும் இப்படியும் பிடித்து, Oxygenக்கு திணறி, எவ்வளவு கஷ்டப்பட்டு எவரெஸ்ட் உச்சியை பிடித்து இருப்பான்!

ஆனால் கீழே இருந்து ஒருவன், "ஐயோ வழி தெரியவில்லையே", என்கிற போது, "நீ அங்கேயே இரு", என்று சொல்லி விட்டு, மேலே போன ஆள் மறுபடியும் கீழே வந்து, "என் கையை பிடித்துக்கொள்", என்று சொல்லி கையை பிடித்து அழைத்துக் கொண்டு போகிறான் என்றால் அவனை விட ஒரு யோக்கியன் உலகத்தில் இருக்க முடியுமா?

அதைப் போல சிவசங்கர் பாபா எவரெஸ்டுக்கு மேல் ஏதாவது ஒரு உச்சி இருக்கும் என்றால் அதற்கு மேல் போய் விட்டார். ஆனால் தன்னிடம் வரும் ஒவ்வொருவருக்காகவும் அவர் கீழே இறங்கி வந்து கையை பிடித்து மேலே அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். நான் தான் மலை ஏறி விட்டேனே? நான் ஏன் இறங்கி வர வேண்டும்? நான் ஏன் உன்னை மேலே அழைத்துக் கொண்டு போக வேண்டும். நீ வந்தால் நான் ஏன் உனக்கு chair போட வேண்டும்? உனக்கு நான் ஏன் எச்சில் plate வாங்க வேண்டும்? உனக்கு நான் ஏன் கை கழுவ தண்ணீர் கொடுக்க வேண்டும்?

இதை எல்லாம் ஏன் செய்கிறேன்? எப்படியாவது உன்னை உருப்பட வைக்க வேண்டும் என்பதற்காக செய்கிறேன்.

என் அளவிற்கு இறங்கி வந்து ஆன்மீகம் செய்தவர்கள் யாரும் கிடையாது. உட்கார்ந்து கொண்டு, உன்னிடம் தட்சிணையை வாங்கிக்கொண்டு, குங்குமத்தை தள்ளி விட்ட சாமியார்கள் தான் இன்றைக்கு நாட்டில் இருக்கிறார்கள்.

இது எல்லாம் மண்டைக்கு ஏறுவதே இல்லை. நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் என்பதும் உனக்குப் புரியவில்லை. எவ்வளவு இறங்கி வந்திருக்கிறேன் என்பதும் உனக்குப் புரியவில்லை.

என் ஆன்மீகம் என்பது எவ்வளவு பெரிய service தெரியுமா? மத்த சாமியாராவது குடும்பத்துடன் இருக்கிறார்கள். காசு வாங்குவான். ஆன்மீகம் என்பது அவர்களை பொறுத்த வரையில் business. நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லாம் செய்வேன். நாம் தான் மக்களுக்கு சாப்பாடு போட்டோம், Drainage clean பண்ணினோம். நாம் தான் செருப்பு துடைத்துக் கொடுத்தோம். நல்லது சொன்னோம், நல்லது செய்தோம். இது ஒரு thankless. யாரோ ஒருத்தர் அல்லது இரண்டு பேர் தேறினால் அதிசயம். The only reason I am in it is out of gratitude for the Lord for the spiritual heights HE has elevated me to.

About The Author