பாபா பதில்கள்

Q. மகான்கள் உடம்போடு இருக்கும் போது மற்றவர்களுடைய கர்மாவை ஏற்றுக் கொள்வது இல்லை. அவர்கள் தங்களுடைய உடலை விட்ட பிறகு, மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்?

Siva Shankar BabaFirst of all, "எனக்கு வயிற்று வலி இருக்கிறது. அதை நீ வாங்கிக் கொண்டால் தான் நீ மகான்", என்று நினைக்கிறதை விட மகா பாதகமான ஒரு attitude உலகத்திலேயே இருக்க முடியாது. "எனக்கு வயிற்று வலி இருக்கிறது. அதை தாங்கிக் கொள்கிற சக்தியை கொடு", என்று கேட்கலாம். இல்லை, "எதனாலே எனக்கு வயிற்று வலி வந்ததோ, அந்த மாதிரி இன்னொரு முறை நான் தப்பு பண்ணாமல் இருப்பதற்கு எனக்கு வழி காட்டு", என்று சொல்லலாம். அதை விட்டு விட்டு, "நான் என் பெண்டாட்டி பிள்ளைக் குட்டி கூட ஜாலியாக இருப்பேன். நீ கஷ்டப்பட வேண்டும். அப்போது தான் நீ சாமியார்", என்றால் என்னது இது? இந்த attitudeஏ தப்பு.

மக்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். See, they want a Samiyaar for their benefit. It is not because they loving some Samiyaar. Counselling லே ஒருத்தன் வந்தான். ஒரு மிளகாய்பொடி இட்லி எடுத்துக் கொண்டு வந்து, "இதை நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்", என்றான். நான் சும்மா தொட்டு விட்டேன். ஆனால் அவனோ, "இல்லை. இல்லை. நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டும்", என்றான். "எதற்கு?", என்று கேட்டேன். அவன், "எனக்கு யானைக் கால் வியாதி இருக்கிறது. நீங்கள் சாப்பிட்டால் எனக்கு நன்றாக ஆகி விடும்", என்று சொன்னான். என்ன love பாரேன் உலகத்திலே! இந்த ஜனங்களை பார்த்தால், ரொம்ப funnyஆக இருக்கும்.

Ramakrishna Paramahamsa had throat cancer. He had a close follower by name Nagamaga Sai. One day he went to Ramakrishna and said, "In no way I can be of use to you. But being a useless man, I think I should take on the cancer and suffer myself physically. And you should live long to serve the society." அப்போது இராமகிருஷ்ணர், "இல்லை. நீ நினைக்கிறது தப்பு. தப்பித் தவறி கூட அப்படி எல்லாம் சங்கல்பம் பண்ணி விடாதே", என்று சொன்னாராம். இதெப்படி இருக்கிறது என்று பாரு! ஒரு மகானுடைய கஷ்டத்தை தான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறான்!

இதே மாதிரி இராமானுஜர் காலத்திலே, அவருடைய சிஷ்யர்களிலே ஒருத்தர் இருந்தார். அவருக்கு இராஜப்பிளவை என்று ஒரு நோய் இருந்தது. Vertebrae யிலே வரக் கூடிய நோய் அது. அவருடைய சிஷ்யர் அவரிடம், "நான் வேண்டும் என்றால் அந்த நோயை வாங்கிக் கொள்கிறேன்", என்று சொல்கிறார். ஆனால் அவர், "அதெல்லாம் வேண்டாம். என்னுடைய கர்மாவை நான் அனுபவித்து விட்டு போகிறேன்", என்று சொல்கிறார்.

For all these Mahatmas one or two sincere devotees இருந்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது வருகிற so-called devotees எல்லோரும் பயங்கரமானவர்களாக இருக்கிறார்கள். அவனுடைய கர்மாவை சாமி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரொம்ப பெரிய மகான்களாக இருக்கிறார்கள். கர்மாவை அவனவன் பண்ணியதை அவனவன் அனுபவித்தால் தான், அவனுடைய lifeலே இன்னொரு முறை வம்பு வராமல் இருக்கும்.

ஆதிசங்கராச்சாரியார் was suffering with high fever. கேரளாவினுடைய இராஜா பெயர் சுதான்வா. அவன் அவரை பார்க்க வந்தான். சிஷ்யர்கள் எல்லோரும், "அவர் ரொம்பவும் sick ஆக இருக்கிறார். இன்னொரு நாள் வாங்களேன்", என்று சொன்னார்கள். அவன் போக ஆரம்பித்து விட்டான். அப்போது ஆதிசங்கரர், "அவனை கூப்பிடு", என்று சொன்னார். அவனை கூப்பிட்டு உட்கார்த்தி வைத்து விட்டு, "உனக்கு என்ன வேண்டும்? கேள்", என்றார். அவனும் ஒரு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தான். அவரும் சொல்லிக் கொண்டே இருந்தார். அவன் போகிற போது, "நீங்கள் ரொம்ப ill என்று சொன்னார்கள். ஆனால் நீங்கள் நன்றாக கிண் என்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள்", என்று கேட்டான். அதற்கு அவர், "எனக்கு fever இல்லை என்று யார் சொன்னது? நீ இந்த நாட்டுக்கு இராஜா. நான் உனக்கு advice கொடுக்கிறது என்னுடைய சந்நியாச தர்மம். அதனாலே ஒரு மணி நேரத்திற்கு என் உடம்பிலே இருந்த feverஐ இதோ பக்கத்திலே இருக்கிற மனைப் பலகையிலே, இந்த wooden plankலே ஆவாஹணம் பண்ணி விட்டேன். அந்த ஜுரம் அதற்கு இப்போது இருக்கிறது. நீ போன பிறகு நான் திருப்பியும் வாங்கிக் கொள்வேன்", என்றாராம். Feverனாலே அந்த மனைப் பலகை டுகு டுகு என்று ஆடிக் கொண்டு இருக்கிறதாம் It is trembling because of the temperature. அவ்வளவு ஜுரம் இருந்து இருக்கிறது. He just transferred it for an hour to the wooden plank because it was his duty as a Sanyasi to help the society.

இப்படி one to one is possible. ஏன் என்றால் transfer of energy என்று சொல்கிறோம். Mughal Historyலே ஹுமாயூனுக்கு தீராத வியாதி வந்த போது, அவனுடைய அப்பாவான பாபர் அதை வாங்கிக் கொண்டு, அவர் இறந்து, அவன் நன்றாக இருந்தான் என்று historical recordsலே இருக்கிறது. It is foolish for the people to think that Mahaan should accept their Karma and these people would live peacefully.

About The Author