புதினா சாதம்

தேவையான பொருட்கள்:

உரித்து பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத் துண்டுகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் – 1/2 கப்

தாளிக்க :

உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
கடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி,
முந்திரித் துண்டுகள் – ஒரு தேக்கரண்டி,
கடுகு – ஒரு தேக்கரண்டி,
எண்ணெயும், நெய்யும் – தேவையான அளவு

விழுதாக அரைக்க:

புதினா – ஒரு கட்டு,
பச்சை மிளகாய் – 6,
உப்பு – சுவைக்கேற்ப,
வறுத்த கடலைப் பருப்பு – 2 மேசைக்கரண்டி,
தக்காளி – ஒன்று.

செய்முறை:

ஒரு கப் அரிசியை சாதமாக தயாரித்துக் கொள்ளவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும், தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதை வதக்கிய பிறகு சாதத்தைச் சேர்த்து சூடாக்கி சற்று நெய் விட்டு கலந்து கிளறவும்.

பின் உருளைக் கிழங்கு வறுவலுடன் பறிமாறவும். சுவையாக இருக்கும்.

About The Author