மடை திறந்து…(13)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கும் எல்லாம் நலம்.

போனவாரம் தாமரை இல்லத்துப் பெண்களைப் பற்றி நிறைய யோசிச்சேன்; அது சம்பந்தமா நிறைய பேர்கிட்டே பேசினேன். தாமரை இல்லத்தில இருக்கற பார்வையற்ற பெண்களுக்குக் கல்வி, உணவு, உறைவிடம் அளிக்கிற பொறுப்பை தாமரை இல்லம் எடுத்துக்கறாங்கன்னா நாம நிலாச்சாரல்லருந்து அவங்களுக்கு இதர பயிற்சிகள் மற்றும் வேலை வாங்கித் தர பொறுப்பை எடுத்துக்கலாம்னு தோணுச்சி. சிவசங்கர் பாபாவுக்கு இது சம்பந்தமா மின்னஞ்சல் அனுப்பிச்சேன். உடனே சந்திக்க வரச் சொல்லி பதில் அனுப்பிச்சார். தாமரை இல்லம் சார்பா ராதாகிருஷ்ணன் அவரைச் சந்திக்கப் போறார். அதே போல சேவாலயா, உதவும் கரங்கள்கிட்டேயும் உதவி கேட்ருக்கேன்.

இல்லத்துப் பெண்கள் பற்றி எனக்கு இன்னும் விபரங்கள் தெரிஞ்சா உதவி பெற ரொம்ப வசதியா இருக்கும். சென்னையில இருக்கற நண்பர்களுக்கு உதவி கேட்டு அஞ்சல் அனுப்பிருக்கேன். அதோட, பார்வையற்றவர்களுக்கு என்ன மாதிரி வேலை வாய்ப்பு இருக்குன்னு ஆராய்ஞ்சு ஒரு பட்டியல் தயார் செய்தா அதுக்கேத்த மாதிரி பயிற்சிகள் ஏற்பாடு செய்ய வசதியா இருக்கும். பிரிட்டன், அமெரிக்கால இருக்கற சேவை நிறுவனங்கள்கிட்டே பேசி இன்னும் தகவல்கள் சேகரிக்கணும்னும் இருக்கு. மத்திய, மாநில அரசுகள், உலக சேவை நிறுவனங்கள் தர்ற உதவிகள் பற்றியும் தகவல் சேகரிக்கணும். எனக்கு நேரம்தானில்லை. இது விஷயமா சின்னச் சின்ன உதவிகள் செய்ய முன்வந்து மின்னூல் பெறுங்களேன்!

ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமான சேவைகள்ல விருப்பம் இருக்கும். என்னோட கல்லூரி நண்பர்கள்லாம் சேர்ந்து நாங்க படிச்ச கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்யலாம்னு சொன்னாங்க. எனக்கு அதில மனம் போகலை. ஒரு ஏழை மாணவரை மேலே கொண்டு வந்தா ஒரு குடும்பமே உயரும்னு எனக்கு எண்ணம். என்னைப் பொறுத்தவரை உதவிங்கறது வெறும் பணம் கொடுக்கறது மட்டுமில்லை. மனிதர்களுக்கு பலவிதமான உதவிகள் தேவையிருக்கு. உணர்வு பூர்வமான ஆதரவு, வாழ்க்கைக் கல்வி, வேலைக்குத் தேவையான இதர பயிற்சிகள், ஆன்மிக வழிகாட்டுதல் – இப்படி எத்தனை எத்தனையோ! இதுல நமக்கு எதைக் கொடுக்கணும்னு தோணுதோ அதைத் தரலாம். ஆதரவு தேவைப்படறவங்ககிட்டே தொலை பேசறது கூட ஒருவித சேவைதான். அதேசமயம் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமான தேவை இருக்கும்கறதையும் மனசில வச்சிக்கணும். அவங்களோட தேவையும் உங்களோட சேவையும் பொருந்தற பட்சத்தில அது வின் – வின் சூழலுக்கு வழி வகுக்கும்.

உதாரணமா தாமரை இல்லத்துப் பெண்களையே எடுத்துக்குவோமே. அவங்களுக்கு ஓரளவு சுயமா செயல்பட ஏதுவான ஒரு வாழ்க்கை முறையை அமைச்சுக் கொடுக்கறதுதான் எல்லாரோட நோக்கமுமே. அதுக்குக் கல்வி ஒரு வழி. கல்வியே இறுதி இலக்கில்லைங்கறதை நாம புரிஞ்சுக்கணும். இந்தக் கல்வி அவங்களுக்கு வேலை வாங்கித் தரலைன்னா வேற வழிகள் தேட வேண்டி இருக்கும். அதனால, சேவையோட நோக்கத்தில தெளிவா இருக்கறது சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நல்லது.
இந்தப் பெண்கள் சுயமா சௌகர்யமா வாழ உங்ககிட்டே இருக்கற ஏதாவது ஒண்ணு உதவும். உதாரணமா உங்களுக்கு நேரமிருந்தா நல்ல நூல்களை வாசிச்சு ஒலி வடிவில அவங்களுக்குத் தரலாம். பாட்டு கத்துத் தரலாம். கைவேலைகள் சொல்லித் தரலாம். இதெல்லாம் சொல்லித் தர நேர்ல போகணும்கறதில்லை. இணையம் வழியாவே இப்போ வசதியெல்லாம் வந்திருச்சே.
மினி மாதிரி இளகின மனசோ கீதா, கலை மாதிரி முதிர்ந்த மனப்பக்குவமோ இருந்தா இந்தப் பெண்களோட பிரச்சினைகளைக் கேட்டு ஆறுதல் சொல்லலாம். சாந்தி மாதிரி நிறுவனம் வச்சிருந்தா அவங்களுக்கு வேலை ஏற்பாடு செய்ய முடியுமான்னு யோசிக்கலாம். சுகவரா இருந்தா சுகமளிக்கலாம்; சுகமளிக்கும் உத்திகளைக் கத்துத் தரலாம். ராதாகிருஷ்ணன் போல உடல் உழைப்பைத் தரலாம். (இந்த வயசில அவர் என்னமா ஓடி ஓடி வேலை செய்யறார்!) இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவதொருவிதத்தில மற்றவங்களுக்கு ஏதாவது தர்றதுதானே சேவை! செய்வோமா?

***

பல வருடங்களுக்குப் பிறகு தொடர்பில வந்த பால்ய நண்பர் ஒருத்தர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில என்னோட படைப்புகள்ல, நிலாச்சாரல்ல, எங்க்கிட்டே இருக்கற குறைகள் எல்லாத்தையும் பட்டியல் போட ஆரம்பிச்சார். நானும் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டேன். அவர் பெரிய புத்திசாலி. நிறைய சாதிச்சிருக்கார். எனக்கு அவர் மேல நிறைய அன்பும் மரியாதையும் உண்டு. ஆனா பல வருடங்கள் கழிச்சு எவ்வளவோ பேச இருக்கும்போது அவரோட கவனம் ஏன் குறைகள்ல இருந்துச்சுங்கறதுதான் எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.

நானும் முன்னால இப்படித்தான் இருந்தேன்னு நினைக்கிறேன். வேலைல தவறுகள் நடந்தா கடுமையா சுட்டிக்காட்டிருக்கேன். குறைகளை யாரும் கேக்காமலேயே மேதாவித்தனமா எடுத்துச் சொல்லி இருக்கேன். இப்போ யோசிச்சுப்பார்த்தா எனக்குள்ள இருந்த தாழ்வு மனப்பான்மைதான் அடுத்தவங்ககிட்ட குறைகண்டுபிடிக்கக் காரணமோன்னு தோணுது. ஆனா இப்போ இது நல்லா மாறிடுச்சு. ஸ்டேஷன்ல வேலை செய்யற துப்பரவு பணியாளர்கிட்டே கூட ‘நல்லா வேலை செய்யறீங்க’ன்னு சொல்றேன். வேலைல தவறு நடந்தா ‘பரவாயில்லை. அடுத்த தடவை இது நடக்காம இருக்க நாம என்ன செய்யலாம்?’னு பொறுப்பை அவங்களோட பகிர்ந்துக்கறேன். இது எதுவுமே நான் வலிஞ்சு பண்றதில்லை. தானா வருது   தாழ்வுமனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமா அகல அகல அடுத்தவங்களை விட நான் மேல்னு காட்டிக்கணும்ங்கற கட்டாயமும் குறையுது. இது என்னோட அனுபவம். உங்களுக்கும் அடுத்தவங்களோட குறை அதிகமா தெரிஞ்சதுன்னா கொஞ்சம் உள்ளே இறங்கிப் பாருங்க.
உங்களுக்குத் தெரியுமா, சின்ன வயசில நான் கருப்பா இருக்கேன்னு எனக்கு பயங்கர வருத்தம். கல்லூரி போனப்பறம் அதோட சேர்ந்து கிராமத்துப் பெண்ங்கற தாழ்வு மனப்பான்மை வேற. அப்புறம் வேற வேற பிரச்சினைகள். உண்மையைச் சொல்லப் போனா பிரிட்டன் வந்தப்பறம்தான் என்னோட தாழ்வு மனப்பான்மை குறைஞ்சது. விநோதமா இருந்தாலும் இதுதான் நிஜம். நம்மூர் போல இங்கே அடுத்தவங்களை அதிகம் எடை போடற பழக்கம் இல்லைன்னு எனக்குத் தோணுது. அதாவது அடுத்தவங்களோட ஒப்பிட்டு தன்னோட மதிப்பை நிர்ணயிச்சுக்கறதில்லைன்னு நினைக்கிறேன். எனிவே…. இது என்னோட அனுபவம். இதுவே எல்லாருக்கும் உண்மையா இருக்கணும்னு அவசியமில்லை.

நான் முன்னமே சொன்னேனில்லையா நான் அலுவலகத்துக்கு புடவை கட்டுவேன்னு. இந்தியர்களெல்லாம் ஒரு அதிர்ச்சியோடத்தான் என்னைப் பார்ப்பாங்க நான் இதைச் சொன்னா. ஒரு பெண்மணி எங்கிட்டே, "உங்களுக்கு வித்தியாசமா இருக்கோமேன்னு ஒரு மாதிரி இருக்காதா?"ன்னு ஒரு முகச் சுழிப்போட கேட்டாங்க. எனக்கு சிரிப்புத்தான் வந்தது. வித்தியாசமா இருக்குன்னு தோல் நிறத்தையும், முகத்தையும் மாத்திக்கவா செய்யறோம்?

நான் அமெரிக்காவில கொஞ்ச நாள் வேலை பார்த்தப்பவும் புடவை கட்டினேன். கூட வேலை பார்த்த இந்தியர்களெல்லாம் கிட்டத்தட்ட திரும்பிப் போய் உடை மாத்திட்டு வரச் சொல்லாத குறைதான். ஆனா பாருங்க, முன்னப் பின்ன தெரியாத அமெரிக்கர்லாம் கூட புடவை ரொம்ப அழகா இருக்கறதா எங்கிட்ட வந்து சொல்லிட்டுப் போனாங்க. அதே போலத்தான் இங்கேயும். புடவையை அப்படிக் கொண்டாடுவாங்க. கோடைலதான் நான் புடவை அணிவேன். இப்போ என்னோட தினப்படி பயணத்தில நிறைய எஸ்கலேட்டர்ஸ் இருக்கறதால புடவை கட்ட யோசனையா இருக்கு. ஆனா டவுசர் போரடிச்சிருச்சிப்பா… (ஸ்மைலி)
நான் அலுவலகத்துக்குப் பொட்டும் வச்சிட்டுப் போவேன். பல வெள்ளைக்காரங்க ‘இது என்ன?’ன்னு ஆர்வமா கேட்டிருக்காங்களே ஒழிய, கேலி பண்ணினதில்லை. ஒரு வடஇந்தியப் பெண் எங்கிட்ட, "உங்களோட தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு. எங்களோட கலாசாரத்தில பொட்டு ரொம்ப முக்கியம். ஆனா நான் யாரும் பாத்திறக் கூடாதுன்னு குங்குமம் வச்சி அழிச்சிடுவேன். இல்லைன்னா லேசா வச்சு மறைச்சு தலைவாருவேன்"னு சொன்னாங்க. எனக்கு உண்மையாவே இதில வெட்கப்பட என்ன இருக்குன்னு புரியவே இல்லை. மேலை நாட்டுக்காரங்க யாராவது இந்தியா வந்தா வெட்கப்பட்டு இந்திய உடை அணியறாங்களா அல்லது பொட்டு வச்சுக்கறாங்களா? அவங்க அவங்களாத்தானே இருக்காங்க? அதனால நான் எல்லாரும் புடவை கட்டுங்க, பொட்டு வச்சுக்கங்கன்னு சொல்றதா அர்த்தமில்லை. உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யத் தயங்கத் தேவையில்லைங்கறது என்னோட தாழ்மையான கருத்து.

தாழ்வு மனப்பான்மை இருக்கறவங்க ரெண்டு விதமா நடந்துக்க வாய்ப்பிருக்கு. ஒண்ணு – தங்களைச் சுற்றி ஒரு கோட்டை கட்டி உலகத்திலருந்து ஒதுங்கி இருக்க முயற்சி செய்யறது. இன்னொண்ணு நீ என்னை அடிக்கறதுக்கு முன்னால நான் உன்னை அடிச்சா என் பயம் வெளியே தெரியாது’ன்னு முந்தி அடிக்கற வகை. ரெண்டாவது வகையைச் சேர்ந்தவங்களைத்தான் நாம அதிகம் வாழ்க்கையில சந்திப்போம். வலி இருக்கறவங்கதான் அடுத்தவங்களுக்கு வலி ஏற்படுத்துவாங்கன்னு ஒரு சொற்பொழிவில கேட்டேன். எனக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்திச்சு. நீங்களும் இதை மனசில வச்சிக்கிட்டு உங்களைக் காயப்படுத்தறவங்களைப் பாத்தீங்கன்னா அவங்க மேல கோபத்துக்குப் பதிலா கருணைதான் வரும். உணமையாதான் சொல்றேன். இப்பவே கண்ணை மூடி உங்களை ரொம்பவும் வருந்த வைத்தை ஒருத்தரை நினைச்சுக்கங்க்க. உருவம் தெளிவா வந்ததும் அவங்ககிட்டேயே கேளுங்க ‘உங்களுக்கு என்ன வேதனை?’ன்னு. என்னதான் பதில் வருதுன்னு பாருங்களேன்!

அது சரி, உங்களைக் காயப்படுத்தினவங்களை நீங்க இன்னும் சுமக்கறீங்களா? அப்படின்னா அது யாருக்கு வெற்றி? அவங்க ஒரு தடவைதான் உங்களைக் காயப்படுத்தணும்னு நினைச்சாங்க. ஆனா நீங்க வாழ்க்கை முழுசும் நினைச்சு நினைச்சு காயப்பட்டீங்கன்னா, உங்க எதிராளிக்கு அமோக வெற்றிதான், போங்க . இது விஷத்தை நாம குடிச்சிட்டு நம்ம எதிரி அழிஞ்சு போவான்னு எதிர்பார்க்கற மாதிரி. எனக்கும் மனசுக்குள்ளே ஏகப்பட்ட வெறுப்பு இருந்தது. ஒரு சுகவர் பட்டியல் போடச் சொன்னப்போ 50க்கும் மேல அதில ஆட்கள் இருந்தாங்க.அந்த சமயங்கள்ல உலகமே எனக்கு எதிரா இருக்கறமாதிரி ஒரு மாயை இருந்தது. ஆனா இப்போ நான் மனசாரச் சொல்வேன் எனக்கு யார் மேலேயும் வெறுப்பு இல்லை. வருத்தம் கொஞ்சம் இருக்கலாம்; கோபம் கொஞ்சம் வரலாம். ஆனா எதுவும் பெரிசா நீடிக்கறதில்லை. இதுக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன். எவ்வளவோ மணி நேரம் சுகப்பயிற்சி செய்திருக்கேன். எவ்ரி செகண்ட் இஸ் வொர்த் இட். ஏன்னா இப்போ என்னைச் சுத்தி எங்கே பார்த்தாலும் அன்பு அன்பு அன்புதான். ஒரு சின்ன கடைக்குப் போனாலும் கூட எனக்காக அன்பா ஏதாவது யாராவது செய்யறாங்க. தவழத் தெரியாத குழந்தை கூட எங்கிட்ட பாசத்தைக் கொட்டுது. அதிசயிச்சுப் பார்க்கறேன். உலகம் மாறலை. நான் மாறி இருக்கேன். அதை உலகம் பிரதிபலிக்குது. அவ்வளவுதான். உங்க பட்டியல்ல எத்தனை பேர் இருக்காங்கப்பா?

படத்தில கட்டிருக்கறது என்னோட கல்யாணப் புடவை. குமரன் சில்க்ஸ்ல மைதில அம்மா கூடப் போய் வாங்கினது. மைதிலி அம்மா மாதிரி, சுசீலாம்மா, விஷாலம் அம்மா, சுதாம்மான்னு எனக்கு நிறைய அம்மாக்கள் உண்டு. இன்னொரு சமயம் அதைப் பற்றி எழுதறேன்.

சரி, நான் சொன்ன பயிற்சி எல்லாம் செய்யறீங்களா? எப்படிப் போகுது?

இந்த வாரம் ரொம்ப அவசரமா எழுதறேன். நிறையவும் நிறைவாவும் எழுத முடியலை… ஆனா நமக்குள்ளே இதெல்லாம் பற்றி நான் கவலைப்படணுமா என்ன?

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் சமத்தா இருங்கப்பா…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

7 Comments

  1. கீதா

    தாழ்வு மனப்பான்மையைப் பத்தி சரியா சொல்லியிருக்கீங்க, நிலா. அதிலும் இரண்டாவது வகையைத் தான் நாம் அதிகம் சந்திக்கிறோம் என்பது நூறு சதம் உண்மை.

    அப்புறம் அலுவலகத்துக்குப் புடவை அணிந்து செல்லும் உங்கள் வழக்கத்தைப் பாராட்டுகிறேன். நான் ஆஸ்திரேலியா வந்த புதிதில் புடவையோ சுடிதாரோ அணிந்து வெளியில் செல்லும்போதெல்லாம் வித்தியாசமாய் உணர்ந்திருக்கேன். எல்லாரும் நம்மையே பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு. ரொம்ப கூச்சமா இருக்கும். அப்புறம் பழகிவிட்டது. அடிப்படையில் ஆஸ்திரேலிய மக்கள் தோழமையுணர்வுடன் பழகக்கூடியவர்கள். அக்மார்க் இந்தியப் பெண்மணியாய் நான் நடக்கும்போது புன்னகைத்து வணக்கம் சொல்லும் அவர்களைப் பார்த்து நான் இப்போது அந்நியமாய் உணர்வது இல்லை.

  2. கலையரசி

    ”உங்களைக் காயப்படுத்தினவங்களை நீங்க இன்னும் சுமக்கறீங்களா? அப்படின்னா அது யாருக்கு வெற்றி? அவங்க ஒரு தடவைதான் உங்களைக் காயப்படுத்தணும்னு நினைச்சாங்க. ஆனா நீங்க வாழ்க்கை முழுசும் நினைச்சு நினைச்சு காயப்பட்டீங்கன்னா, உங்க எதிராளிக்கு அமோக வெற்றிதான்,”

    உண்மை தான். வாழ்நாள் முழுக்க அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எதிராளிக்கு அமோக வெற்றி தான். அதோடு நம் நிம்மதியையும் இழந்து நம் வாழ்வை நாமே பாழாக்கிக் கொள்கிறோம்.
    செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியாகப் புடவை கட்டிக்கொண்டு, பொட்டும் வைத்துக் கொண்டு உங்களது சுய அடையாளத்தைத் தொலைக்காமல் இருப்பதற்கு என் மனமுவந்த பாராட்டுக்கள் நிலா. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஜீன்ஸ் அணிந்து
    கொள்வதாலேயே வெள்ளைக்காரி ஆகிவிட முடியுமா என்ன?

  3. Suhanya

    Hi Nilla and nillacharal friends
    How are u, sry I can’t catch u guys for some time, but read those, Nilla kalakureenga keep it up.
    Thazvu manapanmai pattri neengha sonnathu 100% true Nilla,I use to wear salvar to job(usa),first i use to take a blazer with me, what if they say its informal or something, Then found out they won’t mind, now a days, just salvar. Good to go. Yes pa really pant and shirt sucks. Usa vanthum salvar niraya poduromo nu oru uruthal irunthuthu,Now I got Nillas company.
    Whenever miss India I use to wear our dress, Indian cooking what I like(really I),for just one or two days, we can spend our cooking time for ourselves right. Then back to normal.

  4. Mannai Pasanthy

    தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள் என்பதை புரியும் படியாக சொன்னதற்கு மிக்க நன்றி..கவி நயசெல்வர் மன்னை பாசந்தி

  5. mini

    hello Nila, Eppadi irukinga?

    Inga US la namma indians americans aga padupaduvanga parunga parka avolo comedya irukum. Naan americans mathiri dress panratha kuda solavila food la irnthu kids kitta pesrathila irunthu ayyonu irukum. elarum appadi illa. namma enga irunthalum indians thane? athu eppadi marum? ethuku naama antha identity matha kastapadanum.. enaku nejamavae puriyala..

    oru indian friend oh! neenga innum idly than sapduvingala appdidu kelvi? namku adi patta momnu kupirodrom. ammanu thane vayila varuthu. thanai ariyama sila palakam paluguvethu veru, aana etho seiya kudatha onai seiyra mathiri parkrathu ithalam too much.
    enaku sudithar romba pidikum. athu than enaku comfortablea iruku so enga ponalum athan. aana atha namma matha indians parkira parvai irukae.. thanga mudiyathu. But I dont care. Mathavangala pathikatha ethaiyum naan mathiratha illa.

    athanai perum appadi illa. inga indians agavae irupathai perumaiya ninaikum makkalum irukanga. athani tamil sanga ilakiyam vaithu irukiru oru friend enaku theriyum. tamil kulanthaikaluku katru kudupathilagtum.festivals celebrate panrathagtum.

    namku piditha mathiri nam irunthu vittu povomae?

  6. muruganantham

    உங்க எல்லருக்கும் வணக்கம்.. அனைவரும் நலமா

Comments are closed.