மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (1)

எனக்குப் பின்னால் நடக்காதீர்கள், நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன்.
எனக்கு முன்னால் நடக்காதீர்கள், நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.
என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்!

*****

பொழுது புலர்வதற்கு முன் எப்போதுமே கும்மிருட்டாக இருக்கும். அதுதான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் பேப்பரைச் சுடுவதற்கு சரியான நேரம்.

*****

நீ தவறு செய்யும் வரை உன்னை யாரும் கண்டுகொள்வதில்லை.

*****

உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான்!

*****

உங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே என்று தோன்றினால் வீட்டுக் கடன் தவணையை இரண்டு மாதம் கொடுக்காமல் இருந்து பாருங்கள்.

*****

மற்றவர்களைப் பற்றி குறை சொல்லும் முன்னால் அவர்களுடைய காலணியில் இருந்து பாருங்கள். அப்போதுதான் நீங்கள் குறை சொல்லும் போது அவனிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருப்பீர்கள் – அவனது காலணியுடன்.

*****

ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுத்துப் பாருங்கள். அன்று ஒருநாள் அவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள். அவன் நாள் முழுதும் ஹாயாக படகில் உட்கார்ந்துகொண்டு பீர் குடித்துக் கொண்டிருப்பான்.

*****

யாருக்காவது நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அவன் உங்களைச் சந்திக்காமலே இருந்தால் அந்த நூறு ரூபாய் கடன் கொடுத்தது வீணில்லை.

*****

உண்மையைப் பேசினால் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

*****

பணத்தை இரட்டிப்பாக ஒரே சுலபமான வழி அதை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுதான்.

*****

பெண்களோடு விவாதிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே சரியாக ஒத்து வருவதில்லை.

*****

தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.

*****

About The Author

9 Comments

  1. sudharsan

    உண்மையைப் பேசினால் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

  2. raama baskaran

    நீ தவறு செய்யும் வரை உன்னை யாரும் கண்டுகொள்வதில்லை.

Comments are closed.