மலாய் ஹல்வா

தேவையான பொருட்கள் :

பால் : ஒரு லிட்டர்
கடைந்த கெட்டித் தயிர் : இரண்டு மேசைக்கரண்டி அளவு
சர்க்கரை : 150 கிராம்
பிஸ்தா பருப்பு : ஏழு அல்லது எட்டு
பாதாம் பருப்பு : ஆறு (தோல் நீக்கி மெலிதாக நறுக்கிய பின்பு பயன்படுத்தவும்)
ஏலப்பொடி : ஒரு சிட்டிகை அளவு.
வீட்டில் சேகரித்த பாலேடு : ஒரு கப் அளவு.

செய்முறை :

பால், சர்க்கரையுடன் கடைந்த தயிரையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்திய பின் பால் திரியும்வரை கிளறிக் கொண்டிருக்கவும். கலவை இறுகும்வரை கிளறவும். பாலேட்டை சிறுகச் சிறுக சேர்த்து அல்வா பதமாக வரும்வரை மீண்டும் கிளறவும். ஏலப்பொடியை ஒரு கப்பில் போட்டு சேர்த்து, பின்னர் பாதாம், முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்து கலவையுடன் சேர்க்கவும். பின்பு பதமாக ஆறிய பின்பு நமக்குக் கிடைப்பது சுவையான மலாய் ஹல்வாதான்.. சாப்பிட்டுப் பாருங்கள் தெரியும் அதன் தனி ருசி..!

About The Author