மாங்காய் கடுகு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு கப்,
கிளிமூக்கு மாங்காய் (அ), குண்டு மங்காய் – ஒன்று,
சிறு துண்டு பெருங்காயம் ,
சிகப்பு மிளகாய் – ஆறு ,
கடுகு – ஒரு தேக்கரண்டி,
உப்பு தேவையான அளவு,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி ,
கறிவேப்பிலை,கொத்துமல்லி – தேவைக்கேற்ப,
எள் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை:

சாதத்தை உதிரியாக தயாரித்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவிக்கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவலுடன் கடுகு, சிகப்பு மிளகாய் , பெருங்காயம், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இறுதியில் மாங்காய்த்துருவலையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது சாதத்துடன் எள்எண்ணெயையும் ,அரைத்த விழுதையும் சேர்த்து கலந்து சுவையான மாங்காய் கடுகு சாதம் தயாரிக்கலாம்.

                                                                    ********************************

About The Author