மிடில் கிளாஸ் பாதாம் கீர்

நெல்லி கிரஷ்

தேவையான பொருட்கள் :

கொட்டை நீக்கிய மலை நெல்லிக்காய் – ஒரு லிட்டர் சாறு
சர்க்கரை – ஒரு கிலோ
தண்ணீர் – 1 லிட்டர்
லெமன் எஸ்ஸென்ஸ் சில துளிகள்
சிட்ரிக் ஆசிட் – 30 gms
பச்சை நிறம் – சில துளிகள்
Potassium meta by sulphate – 4 Gms

செய்முறை :

நெல்லிக்காய்களை கொட்டைகளை நீக்கி விட்டு இடித்து சாறு எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீரையும், சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். நெல்லிச் சாற்றைக் கலந்து கலர், எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். Potassium meta bi sulphate ஐ சிறு அளவு நீரில் கரைத்து உடனடியாக பாட்டிலில் நிரப்பவும்.

****

மிடில் கிளாஸ் பாதாம் கீர்

தேவையான பொருட்கள் :

பால் – ஒரு லிட்டர்
துருவிய தேங்காய் – 1/2 கப் (அதிகம் முற்றாதது)
முந்திரிப்பருப்பு – 8
ககசா – 1 தேக்கரண்டி
ஏலப்பொடி – 1/2 தேக்கரண்டி
பச்சை கற்பூரம் – சிறிது
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாமி எஸ்ஸென்ஸ் – சில துளிகள்

செய்முறை :

வெள்ளையாகத் துருவிய தேங்காய்த் துருவலுடன் முந்திரி பருப்பையும், கசகசாவையும் கலந்து நன்றாக நைசாக அரைத்துக்கொண்டு பாலில் நன்றாகக் கலக்கி சிறு தீயில் வைத்துக் கிளறவும். குங்குமப்பூவுடன் பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். கொதிக்க வைத்து சில துளிகள் பாதாமி எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். சூடாகவோ குளிர்ச்சியாகவோ பருகலாம்.”

About The Author