மினி பனீர் ஜாமூன்ஸ்

தேவையான பொருட்கள்:

பனீர் – 250 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
மைதா – 3 மேசைக்கரண்டி
பால் மாவு (Milk Powder) – 5 மேசைக்கரண்டி
ஆப்ப சோடா மாவு (Baking powder) – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

பனீர், மைதா, பால் மாவு (Milk Powder), ஆப்ப சோடா மாவு (Baking powder) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கட்டிகள் ஏற்படாமல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெயுடன் நெய் சேர்த்துச் சூடாக்கி, உருட்டி வைத்த பனீர் உருண்டைகளை மிதமான தீயில் பொரித்தெடுங்கள்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் அரைக் கோப்பைத் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, சர்க்கரை ஜீரா செய்து கொள்ளுங்கள்.

பின்னர், பொரித்து வைத்துள்ள பனீர் ஜாமூன்களை ஜீராவில் போட்டு ஊற விட்டுப் பரிமாற வேண்டியதுதான்.

தேவைப்பட்டால் விதவிதமான வண்ணங்களிலும் செய்யலாம். இந்த மினி ஜாமூன்ஸின் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author