முடிவிலா சாத்தியங்கள் (5)

என்னப்பா, எல்லாரும் நலம்தானே!

"ஆத்தா…. நான் Certified Access Consciousness Facilitator’ ஆயிட்டே…..ன்!" அதனால ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்போட கூடுதலா சின்னதும் பெரியதுமா நிறைய வகுப்புகள் எடுக்கலாம். அதுல சில வகுப்புகளோட தலைப்புகள் இங்கே:

Expand your talents and abilities with ease
Expand your money flow with ease
Expand your self esteem with ease
Expand your career with ease
Expand your health with ease
Expand your communication with ease
Empowered babies
Expand your business with ease
Expand your happiness with ease

இன்னும் ஏதாவது வேணும்னா சேர்த்துக்கலாம்.

இந்தத் தொடர் வகுப்புகளுக்கு அருமையான தமிழ்ப்பெயர் தேடிட்டிருக்கேன். எடுத்துக் கொடுக்கறவங்களுக்கு ஒரு வகுப்பு பரிசாக அளிக்கப்படும்  உடனே பெயர்களை அனுப்பறீங்களா?

வகுப்புகள் 1 மணி நேரப் பேச்சாகவோ அல்லது 2 மணி நேரப் பட்டறையாகவோ இருக்கும். மிகவும் எளிமையான, ஆனால் ஆற்றல் மிகுந்த ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் உத்திகள் சிலவற்றை இந்த வகுப்புகள்ல கத்துப்பீங்க. ஒரு வேளை உங்கள் வாழ்க்கையில நீங்க தேடிக்கிட்டிருக்கற மாற்றம் இதுல ஆரம்பிச்சா?

இந்த வகுப்புகளை உங்கள் குடும்பம்/நண்பர்களோட உங்கள் வீட்டிலேயே கூட நடத்தலாம். குறைந்த பட்சம் 10 பேர் இருந்தா உங்கள் அழைப்பை நான் ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கு. ஆனா எண்ணிக்கையோ அழைப்போ மட்டுமே போதாது. எனர்ஜி சரியா இருக்கான்னு பார்த்துட்டுத்தான் அழைப்பை ஏற்பேன்… முடிவு என்னுடையதே  

மன அழுத்தத்தினாலயும் வாழ்க்கை நெருக்கத்தினாலேயும் டாக்டருக்கு செலவளிக்கிறதில ஒரு ச்சின்னூண்டு பகுதியைத்தான் இந்த வகுப்புக்கு நீங்க தருவீங்க. ஆனா அதனால நீங்க அடையற பலன் விலை மதிக்க முடியாத மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை நலமாகவுமிருந்தா? தெரிவு உங்களுடையதே!

சேவை நிறுவங்களுக்கு இந்த வகுப்புகளை இலவசமாக நடத்தப் போறேன். விருப்பமிருக்கற நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வகுப்புகள்னால மிகப்பெரிய பலன் வர்த்தக நிறுவனங்களுக்குக் கிடைக்கும். ஏன்னா, மகரிஷி எஃபெக்ட் என்ன சொல்லுதுன்னா – 1% மக்கள் மாறினாலே சமுதாயத்தில பெரிய மாற்றங்களிருக்கும். இது ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அமுதென்றும் நஞ்சென்றும்’ தொடர்ல மொசாம்பிக் நாடு ஆழ்நிலை தியானம் மூலம் எப்படி மாறுதலைக் கண்டுச்சின்னு ஒரு கட்டுரை எழுதிருந்தேன். அதை நீங்க திரும்ப படிக்கலாம்.தியானம்ங்கறது எண்ணங்களற்ற நிலை. ஆக்ஸஸ் இப்படிப்பட்ட நிலையை விழிப்பிலேயே கொண்டு வரும் ஆற்றலுடையது. வேறுபாடு என்னன்னா – வாழ்க்கையை இன்னும் அதிகமா எஞ்சாய் பண்ணுவோம்.

இதை ஏன் சொல்ல வந்தேன்னா, ஒரு நிறுவனம் இந்த வகுப்பை தங்கள் பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்றதுனால பணியாளர்கள் மனஅழுத்தத்திலருந்து விடுபடறது மட்டுமில்லாம இந்த 1% எஃபெக்ட்னால வர்த்தகத்தில நல்ல
விரிவாக்கத்தைக் காணவும் பிரகாசமான வாய்ப்பிருக்கு!

சொல்ல மறந்துட்டேனே… 19ம் தேதி சென்னைல 4 இலவச வகுப்புகள் நடத்தப் போறேன். இன்னும் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் கூடத் தயாராகலை. கலந்துக்க விருப்பப்பட்டா உடனே தொடபு கொள்ளுங்க:

http://www.infinitehealing.co.uk/contact-us/

நிலாச்சாரல் வாசகர்களுக்கு முன்னுரிமை உண்டு. நிலாச்சாரல் வாசகர்னு எப்படி நிரூபிப்பீங்கன்னு யோசிக்கிறேன்!  குடும்பப் பாட்டு, சங்கேத வார்த்தை இந்தமாதிரி ஏதாவது வச்சுக்கணுமோ?

***

கடந்த ‘முடிவிலா சாத்தியங்களை’ப் பாராட்டியிருந்த ராஜேஸ்வரனுக்கு நன்றி. பெயரை இன்னும் முழுசா சொல்லாத ஜி மேலும் கேள்வி கேட்டிருக்கார்:

//may be can you please write more about spirits..I heard somewhere they are forbidden to reveal any truth (like exposing something good/bad future event is going to happen to specific person etc), if so when you are a medium,how can "they" reveal anything real to you? Also if GOD is the deiciding authority of fate/events,how spirits can come to know about it? Does it mean GOD plans/discuss it openly with them or what? Do they have general body meeting sort of thing or some computer display or google sort of thing is there in the spirit world through which spirit can query and find out and then tell to medium?//

சுவாரஸ்யமான கண்ணோட்டங்கள். இதற்கு நான் 2009ல் புதியபார்வை இதழுக்காக எழுதிய கட்டுரையத்தான் சுட்டிக் காட்டுவேன். அது பதிலல்ல. எனக்கு பதில் தெரியாது. அதைப் பற்றிய கவலையும் எனக்கில்லை. ஏனெனில் பதில் தெரிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன், அந்தக் கட்டுரை எழுதிய காலகட்டத்திலிருந்த மனநிலையிலிருந்து நான் வெகுவாய் விரிவடைந்திருக்கிறேன். அதற்குக் காரணம் எனக்குக் கிடைத்த பதில்களல்ல…. நான் கேட்ட கேள்விகளே! பதில்களைத் தேடாத கேள்விகள்… கேள்விகளாக வாழும் மனநிலை. கேள்விகள் வழிகளைத் திறக்கின்றன… அளவிலா சாத்தியங்களை உருவாக்குகின்றன…

சரி, மேலே குறிப்பிட்ட கட்டுரை இங்கே:

https://www.nilacharal.com/ocms/log/08091003.asp

//Another question is about reincarnation, most of the religions say ,if somebody died then depends on their karma he/she might have another birth as whatever living being that GOD wants him/her to be,if so, how it is possible to talk to their spirit through a medium as the dead person already would have taken another form of birth?//

ஆன்மா ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும் என்ற தீர்மானத்திலிருந்து இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதோ? காலம் உண்மையானதா? உண்மையானதென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? எப்போதெல்லாம் நாம் முன்முடிவுகளை எட்டுகிறோமோ அங்கெல்லாம் நாம் சாத்தியங்களை முடக்குகிறோம் என்பது எனது பணிவான கண்ணோட்டம்.

//These are genuine questions and I am not teasing you, so please dont take it personaly and give me your best answers please.//

ஹா…ஹா… எனக்கு பதில்களில் நம்பிக்கையில்லை, தோழரே/தோழியரே. எனக்கு பதில்கள் தெரியாது. ஆனால் நன்றாக கேள்வி கேட்க வரும். கேள்விகளை நான் கேட்கிறேன்… அவை திறக்கும் சாத்தியங்களில் உங்களுக்குத் தேவையானதைத் தெரிவு செய்வது உங்களது சாமர்த்தியம் 

கேள்விகளைத் தொடருங்கள்… நான் கேள்விகளுடன் திரும்ப வருகிறேன் – நீங்கள் விரும்பினால்!

***

இந்த வாரம் முகநூல்ல ஒரு கேள்வி கேட்டிருந்தேன், ‘பணத்தைப் பற்றிய கவலையே இனி இல்லையெனில், உங்களுக்காக இன்று என்ன தேர்ந்தெடுப்பீர்கள்?’

இந்தக் கேள்வியைக் கேட்டப்பறம் எனக்குள்ள நான் என்ன செய்ய விரும்பறேன்கறதுல இன்னும் அதிக தெளிவு வந்திருக்கு. சொல்லப்போனா புதுசா ஒரு வகுப்பு இதனால உருவாகி இருக்கு…

வேறென்ன சாத்தியங்களை இந்தக் கேள்வி உங்களுக்கு உருவாக்கும்?

***

உங்கள் குழந்தைகள் நீங்கள் நீங்களா இருக்கறதனால அதிகம் பலனடைவாங்களா அல்லது அவங்களுக்காக நீங்க உங்களை முழுவதுமா மாற்றிக்கறதுனால பலனடைவாங்களா? இந்தக் கேள்வி உங்களுக்குள்ள இன்னும் பல கேள்விகளை உருவாக்கலாம்… கேள்விகளோ பதில்களோ என்ன தோணுதோ பகிர்ந்துக்கங்க.

‘யாராக இருக்கிறீர்கள்’ங்கற தலைப்பில நான் எழுதிருக்கற ஆங்கிலக் கட்டுரை இங்கே இருக்கு:

http://www.britishsouthindians.co.uk/who-are-you-being/

எழுத நிறைய இருக்கு… கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கறதுனால அடுத்த வாரம் எழுதறேன்…

அதுவரைக்கும் யாராகவெல்லாம் இருக்கப் போறீங்க? 

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

2 Comments

  1. ராகவா

    நிலா நீங்க இந்த ஹீலிங்க பற்றி சொல்லும்போது, எப்போதும் என்னோட மனதில் இருக்கும் ருத்ராட்சத்தையும் இணைக்கமுடியுமான்னு பார்க்கிறேன். இந்த ஹீலிங்குக்கும், ருத்ராட்சத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? அதாவது ருத்ராட்சம் அணிந்துகொண்டு ஹீலிங் பெற்றால் ஏதாவது வித்தியாசம் இருக்குமா? ம்ம்ம்…வித்தியாசம்னா அதாவது இந்த ஹீலிங்குக்கு அது மறைமுகமா உதவுமா?

  2. g

    அம்மாடியொவ் விடாம ரென்டு நாளைக்கு விசு படம் பாத்த எபெக்கிட்டு…மி எச்கெப்பு…

Comments are closed.