முரண்

அவனும் நானும்..
எப்பவும் சண்டை போடுவோம்…
எனக்கும் அவனைப் பிடிப்பதில்லை…
அவனுக்கும் என்னைப் பிடிப்பதேயில்லை….
கதைக்காத பொழுதெல்லாம் அம்மாதான்..
கைபிடித்து விடுவாள்….
‘கண்ணா… இவளையும் பள்ளியில
விட்டுவிடு…. ”.
அம்மாதான் ஏற்றிவிட்டாள்
முதன் முதலாக…….
தைப்பொங்கலா….;
‘கண்ணாவைக் கூப்பிடு….!
வருடப்பிறப்பா கண்ணாவைக் கூப்பிடு…
தீபாவளியா ….
‘கண்ணா எங்கே…?
அம்மா தான் கேட்பாள்….
நான்தான் ஓடிப்போய் கூட்டி வருவேன்….
ஒருநாள்….
அப்பா வாங்கிவந்த
சாக்லெட்டை…
முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட..
‘கண்ணாவுக்குக் கொடுக்கவில்லையா…”.
அம்மாதான் ஏசினாள்….
‘இந்தா இதைக் கொடு…”.
என்று
வேறு சாக்லெட் தந்தவளும் அம்மாதான்…

நீண்டநாட்களின் பின் ஒருநாள்…
புதுச்சட்டையுடன்…
பள்ளிக்கு வெளிக்கிட்டுப் பாத்திருந்தேன்….
கண்ணனுக்காக…
வந்தான் சிரித்தபடி…
அம்மாவும் வந்தாள்
‘கண்ணா நீ போ இனிமேல்
அவள் அண்ணாவுடன் வருவாள்… ”.
அம்மாதான் சொன்னாள்….

அவனுக்கும் புரியவில்லை ….
எனக்கும் புரியவில்லை…

About The Author

4 Comments

  1. meenatchi

    இப்படி இருக்கலாம் இக்கவிதையாக!

    சதா சண்டை வம்பு வழக்கு
    எனக்கு அவனைப் பிடிக்கவில்லை
    அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை
    இருவருக்கும் இடையிலே அம்மா பாலம்!
    இணைத்து விட்டாள் இருவரையும் சேர்த்து சேர்த்து!
    கண்ணா இல்லா கொண்டாட்டம்
    எந்நாளும் இல்லை எங்கள் வீட்டில்
    எப்பவும் கண்ணாவுக்கு முதல் அழைப்பு
    கண்ணா1 கண்ணா என்று அழைத்து
    தின்பண்டம் முதல் உண்னும் உணவு வரை
    தித்திக்கும் உறவைப் பங்கிடு முறையில் வளர்த்தது அம்மா!
    முடிவில் நீண்ட இடைவெளிக்குப் பின்
    முடித்து வைத்ததும் அம்மா!
    ஒரு நாள் உன்னுடன் இனிமேல் வரமாட்டாள்
    ஒதிங்கிக்கோ! இனி அவள் போவது அண்ணாவுடன் தான்
    உறவு வளர்க்கப்பட்டு வெட்டப்பட்டது ஏன்?
    அவனுக்கும் புரியவில்லை! எனக்கும் புரியவில்லை !
    புரியாத புதிர் இல்லையா!

  2. .கருவெளி ராச.மகேந்திரன்

    ஒரே நிகழ்வை
    ஒவ்வொருவரும்
    ஒவ்வொரு விதமாய்
    காண்பார்கள்…
    கேட்பார்கள்….
    கூறுவார்கள்…

    அதே நிகழ்விலிருந்து…
    ஒவ்வொன்றை கற்றும் கொள்வார்கள்…
    இது சத்தியமென்பதற்கு
    இதோ கண்முன்னே கவிதைகளாய்
    உங்கள் நிகழ்வுகளில் கற்றவை…

    இருவருக்கும் வாழ்த்துக்கள்…
    =====================================
    முதலில் எழுதும் போதும் தோன்றும் போதும்
    அப்படியே உயிரின் ஓசையாய் அமைந்துவிடும்…
    மறுமுறை, இன்னும் ஒருமுறை
    உற்று நானே அதை பார்க்கையில்..
    உயிரோடு… மூளையும் கலந்து…
    இனிய இசையாக்கிவிடும்…
    ஒவ்வொரு கவிதையையும்..
    இரண்டிற்கும் வித்தியாசம் கூற
    நான் தேவையில்லை உங்களுக்கு…
    ================================
    பயணம் தொடரட்டும்…

  3. kannan

    the biological difference has become the barrier to her friendship. when this world is gonna change and understand the value of true friendship without perversion, including her mother ?. Is there any biological difference in minds for friendship?

  4. P.Balakrishnan

    விமர்சனக் கவிதைகளும் நன்று.! -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.