லக… லக… ஜோக்ஸ் (72)

ஆசிரியர்: ஆங்கில எழுத்துக்களை வரிசையாய் சொல்லு பார்க்கலாம்?

மாணவன்: B, C, D, E, F…

ஆசிரியர்: இரு, இரு! ஏன் A-வை விட்டுட்டே?

மாணவன்: அது சின்ன பசங்களுக்கு இல்லையாம் சார்! பெரியவங்களுக்கு மட்டும்தானாம்.

======

நண்பன் – 1: இந்த ஸ்பிரே வாசனையே நல்லாயில்லையே. ஏதோ பொணத்துக்கு அடிக்கிற மாதிரி இருக்கு!

நண்பன் – 2: இது ‘பாடி ஸ்பிரே’ இல்லையா?

=======

நண்பன் – 1: நேத்து நான் காட்டிலே சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். உடனே பயந்து ஓடிப் போயிடுச்சு.

நண்பன் – 2: அட! நானும் காட்டில் நேத்து ஒரு சிங்கத்தை பார்த்தேன். அதோட முதுகை நான் தடவி கொடுத்தப்போ ஈரமா இருந்தது. அது நீ செஞ்ச வேலைதானா?

======

சாப்பிட வந்தவர்: சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா?

சர்வர்: என்ன, இவ்வளவு அக்கறையா கேட்கறீங்க?

சாப்பிட வந்தவர்: நான் எது ஆர்டர் செய்தாலும் பாதிதான் வருது; அதனால்தான்.

=====

அரசர்: புலவரே! உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுவீர்?

புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! சமீபத்தில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அவர் பெயர் உங்களுக்கு முன்பாகவே இருக்கிறது.

About The Author