லக… லக… ஜோக்ஸ் (84)

நண்பர்-1: கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க… நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?

நண்பர்-2: ஹி… ஹி… நான் சொன்னது ரெண்டாங் கல்யாணத்தை!

==========

நண்பன்-1: இந்த சிகரெட்ட இத்தோட நான் விட்டுடப் போறேன்.

நண்பன்-2: என்ன திடீர்னு…?

நண்பன்-1: பின்ன… இதுக்கு மேல பிடிச்சா இது கைய சுட்டுடாதா?

==========

நபர்-1: அந்த ஆள் ஓட்டல்ல மாடு மாதிரி உழைச்சாரு. ஆனா, வேலையை விட்டு தூக்கிட்டாங்க.

நபர்-2: ஏன்?

நபர்-1: எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே!

==========

வீரன்-1: போர்க்களத்தில் ‘வாள் வாள்’னு கத்துற குரல் கேட்குதே?

வீரன்-2: அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்!

==========

நபர்-1: வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?

நபர்-2: அப்படியே அப்பனை உரிச்சு வைச்சிருப்பான்.

==========

About The Author