வட்டம்

வேர்களின் முனைப்பில்
வளரும் செடி
மலர்களை மலர்வித்து
காய்களாக்கிக் கனிவித்து
விதைகளை ஈனுது
அதது மீண்டும்
அததுவாய் முளைக்குது
அததுவாய் வளருது
வட்டத்தை நிறைப்பிக்கும்
பரிணாமப் பயணத்தில்
சிக்கலோ அரசியலோ
அவற்றுக்கில்லை-
மானுடக் கண்களிலான
விஷப்படர்வுபோல்!

About The Author