வாசகர்களுக்கு நிலாச்சாரல் விடை பெறும் காலம் பற்றிய ஒரு அறிவிப்பு

அன்பிற்கினிய வாசக நண்பர்களுக்கு

9 வருடங்களுக்கும் மேலாக திங்கள் தோறும் நிலாச்சாரல் வெளிவர நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணம். விடை பெறும் காலம் வந்தாகிவிட்டது.

கடந்த சில வருடங்களாகவே நிலாச்சாரலை விரிவுபடுத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டு அது சாத்தியமில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். புதுமை ஏதுமில்லாமல் இதே நிலையில் நிலாச்சாரலைத் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை – சலிப்பாக இருக்கிறது. அதனால் கைவசமிருக்கும் படைப்புகளையும் வந்து கொண்டிருக்கும் தொடர்களையும் பிரசுரித்ததும் நிலாச்சாரல் இதழ்களை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறேன். இந்த முடிவு மிக நிதானமாய், பிரச்சினையின் பல பரிமாணங்களையும் ஆராய்ந்தபின்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை வெளிவந்த படைப்புகளை வாசகர்கள் நிலாச்சாரலில் வாசிக்க எந்தத் தடையுமிருக்காது. எனது படைப்புகளும், வாசகர்களின் மதிப்பினைப் பெற்ற சில படைப்பாளிகளின் படைப்புகளும் (அவர்கள் விரும்புகிற பட்சத்தில்) தொடர்ந்து நிலாச்சாரல் இணையதளத்தில் பிரசுரமாக வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவரும் பத்திரிகையாக அல்லாமல் விரும்புகிற நேரத்தில் புதுப்பிக்கப்படும் இணையதளமாக நிலாச்சாரல் விளங்கக் கூடும். இந்த மாற்றங்கள் நிகழ சில வாரங்கள்/மாதங்கள் ஆகலாம். அதுவரை சிற்சில தடங்கல்கள், தாமதங்களுடன் நிலாச்சாரல் இதழ்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவரும்.

நிலாச்சாரல் மூலம் எனக்கு விசாலமான அனுபவத்தையும், ஆழ்ந்த மனநிறைவையும், எண்ணற்ற அன்பு உள்ளங்களையும், கிடைத்தற்கரிய படிப்பினைகளையும் நல்கிய உங்களனைவருக்கும் குறிப்பாய் என் தோளோடு தோள் நின்று இந்த இனிய பயணத்தைச் சாத்தியமாக்கிய நிலாக்குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை அழுத்தமாய் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். நிலாச்சாரல் இதழ் நின்று போனாலும், அது நமக்குள் ஏற்படுத்தித் தந்த பந்தம் நிலைத்திருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

என்னுடன் தொடர்பிலிருக்க:

http://en-gb.facebook.com/people/Nila-Raj/720120663

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

32 Comments

  1. shanthi

    அன்புடென் நிலா அவர்கலுஇக்கு நான் மிகவும் ரசித்து நெஅசித்து படிக்கும் நிலாசாரல் இனி வெகு விரைவில் நின்ட்ருவிடும் என்பதை மனம் யெஅயர்க மரூக்க்கிரது. தயவு சைது இன்னும் க்னொஞம் முயர்சி எடுத்து இந்த இதாலை நடத்தவும், இதரிக்கு வுஙலுஇக்கு அந்த ஆன்டவன் துனை இருக்க நான் ப்ரர்திகிரஎன்.

  2. janani

    உங்கள் முடிவு மிகவும் வருத்தமாக உள்ளது, எனினும் விரைவில் புதிய இதழாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. We expect it will come very fast. We will give our best support to you. Anyway pls reconsider your decision.

  3. Surya

    Achachoo.

    enanga solrenga. Nilacharal is one of my fav site. Please do not quit Nilacharal.
    Please try to uphold.. We will support with your team.
    I will miss you a lot…. :((

  4. k.natarajan

    இது வரை வந்த நிலாசாரல் இனி இல்லை என்பது வருந்த தக்கது. நினைக்க தெறிந்த மனமே மறக்க தெறிந்து கொள்

  5. ஷக்தி

    புதுமை ஏதுமில்லாமல் இதே நிலையில் நிலாச்சாரலைத் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை – சலிப்பாக இருக்கிறது….” ,
    “நிலாச்சாரல் மூலம் எனக்கு விசாலமான அனுபவத்தையும், ஆழ்ந்த மனநிறைவையும், எண்ணற்ற அன்பு உள்ளங்களையும், கிடைத்தற்கரிய படிப்பினைகளையும் நல்கிய..”, என்ற வார்த்தைகள் ,
    உலகத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள தாங்கள் இன்னும் முயற்சி செய்ய ஆரம்பிக்கவே இல்லை என்பதாகவே நான் புரிந்து கொண்டேன்.
    இந்த இளம் வயதில் தாங்கள் நடத்தி காட்டிய சாதனை பாராட்டுக்குறியது!
    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!ந்ன்றி!”

  6. c.p.senthilkumar

    ஆடுன காலும்,பாடுன வாயும் சும்மா இருக்காது.மீண்டும் fஈல்டுக்கு வருவீர்கள்

  7. victor

    Dear Sir,

    It is extremely sad to hear this wonderful Tamil website Nilacharal
    which is highly informative and useful to Tamilians living farway
    from Tamilnadu. I like Nilacharal very much, this will be first web
    I used browse. My hearty congratulations to you for all the excellent
    informations that came from Nilacharal.

    I request you to please reconsider your decision, try to continue this
    good service to our Tamil language.

    Yours sincerely,
    Victor

  8. மு.து.செல்வராஜா

    இது மிகவும் சோகமான செய்தி. இதுவரை செய்த சேவைக்கு எனது நன்றி. தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்.
    மு.து.செல்வராஜா

  9. peba

    Dear Nila,
    Its really very shocking.
    Pls reconsider the decision and try to continue as usually.
    Nilacharal – tamil readers will never forget.

    B Reg
    Peba

  10. Sandhya Giridhar

    Dear Nila,

    This sudden decision is really shocking to me. Nilacharal has provided lot of valuable informations and please reconsider the decision. Every monday nilacharal enriches the knowledge and some of the news give soothing touch . Please do not take such hasty decisions and think many times before taking major steps. My hearty well wishes and God is always there to help and guide us.

  11. ambujamadhavan

    ஒவ்வொரு தடவயும் புது புது பொலிவொடு வரும் நிலா நிர்காது நிர்கவும் விடமாட்டொம்.
    வாழ்க நிலா வலரவென்டும் உன் புகழ்.
    பனிவுடன்,
    அம்புஜாமாதவன்.

  12. Mrs.rajan

    கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.இந்த இதழை மிகவும் விரும்பிப்படிப்பேன்.இனி திங்கட்கிழமை வரும்போதெல்லாம் மிகவும் வெறுமையாக இருக்கும்

  13. Balasundar Senthilvel

    மிகவும் வருத்தமாக உள்ளது. ஏதோ ஒரு வெறுமையான உணர்வு தோன்றுகிறது. 9 ஆண்டுகள் வெற்றிகரமாக இயக்கி பல வாசக நண்பர்களை உருவாக்கி உள்ளீர்கள். மீண்டும் நிலாச்சாரல் விஷ்வரூபம் எடுத்து வர வாழ்த்துக்கள்.

  14. Devika

    அன்புள்ள நிலா,
    மனம் துவண்டு போகாதீர்கள், முயற்சி திருவினையாக்கும். காலம் வரும் உங்களுக்கு சாதகமாக, மறுபடியும் இந்த நிலசாரல் புது பிறவி எடுக்கும். நான் கடவுளை வேண்டுகிறேன் உஙகளுக்கு துணையிருக்க.

  15. Bharani

    Dear Nila,
    This is really shocking news. I know about nilacharal recently… after reading it only, i started to write stories. it gives me such a confidence.. like me, those can get confidence and start to breif their experiences as story/ article will loose a big oppurtunity… many of us are impressed by ur service. kindly reconsider your decision……

  16. PREMALATHA

    கனத்த இதயங்களுடன் நாங்களும் விடை கொடுக்கின்றோம். நிச்சயம் நிலா மீண்டும் இங்கு பௌர்ணமியாய் வலம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்…. வார்த்தை வர மறுக்கிறது! நிலா குடும்பத்தினர் அனைவருக்கும் இறையருள் கிடைக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள். நன்றி.

  17. suj

    தயவு செய்து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிலாச்சாரல் எங்கள் தினசரி வாழ்க்கையில் வாரம் ஒரு முறை பூக்கும் மலர். இது வாசிக்காலம்…கடினம்:(

  18. Radha

    ஏன சிர் இது… நடக்கடெரியதவனை நடக்க வcஇட்டு இப்டி பதை டெரியத கட்டில் நில்ல இல்லம போ நு சொனப்ல வெட்டுடு பொரெஅன் நு சொனா எப்டி… முடிவை மதுஙாஅ… நில்ல வனில்ல் உல்லலவும் எஙலுக்கு டொடர்ந்து வெனும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ல்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்

  19. shara

    Im really very sory abt this bad news. Anyway I wish u ur any future plan.
    Thank u all to every week gave valuble information & blabla….
    God bless u all(nilla Family)
    Kind regars
    SHARA..

  20. MohanaValli

    எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, அதிர்ச்சியாக உள்ளது!!!!
    உங்கள் முடிவை மறுமுறை யோசியுங்கள்

  21. Rajeswaran

    தயவு செய்து உங்கள் முடிவை மாற்ற வேண்டிக்கொள்கிறேன்.

  22. m.valliammai

    தங்கள் முடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தலாம் நிலவுக்கு அமாவாசை வரலாம். ஆனால் மீண்டும் பவுர்ணமி வரவேண்டும். நிலாச் சாரல் எங்களுக்கு கோடை மழை ஆயிற்றே.

  23. S.Sankar Ganesh

    அய்யயோ என்ன முடிவு இது. இதை சரி செய்ய என்ன செய்ய வேன்டும்?

    தயவு செய்து தொடர முயற்சி செய்யவும். எங்காளால் ஆன உதவி செய்கிறோம்.

    இனிய பயணம் தொடர வா துக்கள்.

  24. darshi yamunarajan

    Dஎஅர் ணில

    Vஎர்ய் சட் அபொஉட் தெ நெந்ச். ஈ ரெஅல்ல்ய் எஞொயெட் திச் நெட்சிடெ அன்ட் லெஅர்னெட் சொ முச் fரொம் இட். Pரய் டொ Gஒட் ஒனெ டய் இட் cஅன் ச்டர்ட் அகைன். ஆல்ல் தெ பெச்ட் fஒர் தெ fஉடுரெ என்டெஅவொஉர்ச். Gஒட் Bலெச்ச்
    Dஅர்ஷிYஅமுனரஜன்
    ஆஉச்ட்ரலிஅ

  25. v.shanmugathai

    உங்கள் முடிவை மறு பரீசீலனை செய்யவும்.மிகவும் வருத்தமாக உள்ளது.

  26. Lakshmi

    Dear Nila,

    Every monday, I start my day by reading the wonderful stories & specials section. Though as a reader I am disappointed to know the end of this wonderful website, I am sure you will come up with a better setup. My best wishes to you.

    With best regards,

  27. Aarthy

    Am shocked to read this info. Hope Nilacharal will come back or u willr e consider ur decision.

  28. mangalagowri

    வருத்தமான செய்தி. மனசுக்கு வேதனையாக இருக்கிறது

  29. mahadevan

    it is sad that the continuation of the work is coming to a close. I am not able to comprehend why you are bored with this work. But as is the nature of everything in the world, every beginning has an end. But your end is so soon. But the end definitely has a beginning. If Nilacharal stops tamizhkalam from India is beginning to continue your work. Rethink your decision. Even now it is not late.

  30. Deva

    அன்பின் நிலா, நிலா தேய்வது மீன்டும் வளர்வதக்கு மீன்டும் புது பொழிவுடன் சந்திப்போம். தேவபாரதி.

  31. P.Balakrishnan

    இரண்டு நாட்களுக்கு நான் அனுப்பிய பின்னூட்டம் வெளிவரவில்லை. சென்னையில் என் கணினியில் நிலாச்சாரல் தெரியவில்லை. இப்போதுதான் இச்செய்தியைப் படித்தேன். வேதனையடைந்தேன். சலியாத மனம் வேண்டும் என்று அபிராமியை வேண்டுவார் அபிராமிப்பட்டர். வளர்வதும் தேய்வதும் நிலவின் இயற்கை. உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் எனது தேய்ந்த நிலவு” என்னும் கவிதை முதல் பரிசு பெற்றுள்ளது(18.9.2010). “பழுதிலா முகமாய்ப் பரிதியின் பிம்பமாய் முழு நிலா என்றன் மனக்கண் மலர்ந்தது” என்று முத்தாய்ப்பாய் முடித்திருப்பேன் அக்கவிதையை. நிலாச்சாரலில் ஆர்வமுடையோர்களை அழைத்து நல்ல ஆலோசனைகள் பெறலாம். சென்னை திரும்பியதும் நிலாச்சாரல் வாசகர்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கச் சம்மதிக்கிறேன். நிலாச்சாரல் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் முகவரியைத் தெரிவித்தால் ஒருவருகொருவர் தொடர்புகொள்ள வசதியாகும்.
    -அரிமா இளங்கண்ணன்(ஈடன் பிரைரி, மினியாபொலிஸ், அமெரிக்கா)
    பே.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,எம்.எல்.
    (கவிஞர் அரிமா இளங்கண்ணன்)
    வழக்கறிஞர் & நோட்டரி
    103/1 & 103/2, தாணாத் தெரு
    புரசைவாக்கம்
    சென்ன/600007
    வீடு;044/26625366 அலுவலகம்;044-/25364390 செல்:9840149221
    இ மெயில்;பிபாலகிருஷ்ணன்1@ரிடிப்மெயில்.காம்

Comments are closed.