விரல் தொட்ட வானம் (34)

தனிமை

ஹலோ…!
வீட்டுல யாருங்க?
குரல்களோ,
அழைப்புமணியோ
தொலைபேசி சப்தங்களோ
ஏதேனும் ஒன்று
நுழையும் உள்ளே
அழைப்புகளாய்…
உச்சத்தில் இருக்கையில்.

நன்றியைத் தவிர

நிமிராதபடி இருக்கிறது
பலருக்கு
நாய்வால் குணம்.
அதன்
கோரப் பற்கள் போலவே
அவர்களின் ஆசைகளும்.
ஓடிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்
அது போலவே
தங்களின் தேவைகளுக்காக.
அதன் இயல்புகள் உண்டு
மனிதரில் பலருக்கு.
நன்றியைத் தவிர.

ஏதேனும் ஒன்று

முற்றிலும் புரிந்து கொள்வதற்கான
நிகழ்பாடுகளுடன்தான்
நமக்கான தினங்கள்
புரிந்தும் புரியாமலும்
அமைகின்ற நிகழ்விலும்
தெளிவுடன் தேடவே
முனைப்புடன் மனசு
இருப்பினும்
நிறைவான புரிதல்
நிகழும் முன்
முடிந்து விட்ட நிலையில்தான்
வாழ்க்கையோ
என்னவோ
ஏதேனும் ஒன்று

–தொட்டுத் தொடரும்…

About The Author