வெப்பக்காற்று

புகை மண்டலம் நடுவே
என் பயணங்கள்..
நாசி பொத்தி.. கண் கலங்கி
இரு புற வாசல்கள் அடைத்து
இறங்கும் வழி புலப்படாமல்..
சகித்துக் கொண்டு சிலர்..
சுரணையற்று சிலர்..
இயற்கை பொய்த்ததை
சினந்து சிலர்..
வெப்பக் காற்று செவி மடல்களில்
சொல்லிப் போகிறது..
தவறுகளின் பட்டியலை.

About The Author