வெளிநாட்டில் இருந்து கொண்டு தாய்நாட்டுச் சொத்துக்களை நிர்வகிக்க ஆலோசனை

நான் இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். இந்தியாவில் உள்ள எனது சொந்த ஊரில் எனக்காக சில சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். என் தந்தைக்கு முறைப்படி பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தேன். நான் இங்கிருந்து ஊருக்கு பணம் அனுப்ப, என் தந்தை சொத்துக்களை வாங்கி அதைப் பராமரித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் இறந்துவிட்டதால், என் தாயார் எல்லாப் பத்திரங்களையும் என்னிடம் தந்துவிட்டார். அவர் தற்போது என் சொத்துக்களைப் பராமரித்து வருகிறார். எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள். அண்ணன் இந்தியாவிலும் தம்பி என்னுடன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள். நான் எனது காலத்திற்குப் பின் என் சொத்துக்களை என் பிள்ளைகளுக்குத் தந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். என் பிள்ளைகள் இருவரும் இங்கிலாந்தில்தான் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு என் சொத்தைப் பராமரிப்பதற்கோ அல்லது விற்பதற்கோ எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? தகுந்த ஆலோசனை தேவை. நன்றி!

– சாந்தி, இங்கிலாந்து

நீங்கள் இரு வகையான பிரச்சினைகளைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள்.

1) சொத்தை விற்பது

2) சொத்தைப் பராமரிப்பது

1) சொத்தை விற்பது :

நீங்கள் முறைப்படிதான் சொத்து வாங்கியிருக்கிறீர்கள். உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத்தான் போய்ச் சேரும். அதை உங்கள் குழந்தைகள் விற்க நினைக்கும்போது அவர்களே இங்கு வந்து விற்கலாம் அல்லது இங்கு யாருக்கவது Power of Attorney கொடுத்து விற்கலாம். ஆனால் உங்கள் இரு குழந்தைகளில் எந்தெந்த சொத்து யாருக்கு என்பதை நீங்கள் முடிவு செய்து இப்பொழுதே அதன்படி உயில் எழுதி வைத்து விட்டால் நல்லது. அதை நீங்கள் இங்கு வரும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registrar Office) பதிவு செய்துவிடவேண்டும். அப்படி செய்துவிட்டால் உங்கள் காலத்திற்குப் பிறகு அந்தந்த சொத்துக்களின் உரிமம் உங்கள் பிள்ளைகளுக்குத் தானாகவே போய்ச் சேர்ந்துவிடும். பின்பு அவர்களுக்கென்று உள்ள சொத்தை அவர்கள் தங்களது விருப்பப்படி தனியாக விற்கலாம்.

அப்படியில்லை என்றால் உங்கள் எல்லா சொத்துக்களுக்கும் உங்கள் இரு பிள்ளைகளும் உங்கள் கணவரும் உரிமையாளர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் மூவரும் வாரிசு சான்றிதழ் வாங்கவேண்டும். எந்த சொத்தை விற்றாலும் மூவரும் சேர்ந்துதான் விற்கவேண்டும். அதனால் இப்பொழுதே முறைப்படி உயில் எழுதி பதிவு செய்து விடுவது நல்லது.

2) சொத்தைப் பராமரிப்பது

எந்த வகையான சொத்து என்பதை வைத்துத்தான் பராமரிப்பு அமையும்

a) வீடு அல்லது Flat
b) நிலம்

a) வீடு அல்லது Flat என்றால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

i) அரசாங்கத்திற்குக் கட்டவேண்டிய Corporation tax, Metro water tax, EB அனைத்தும் உங்கள் பெயரில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். அனைத்து வரிகளையும் தவறாமல் கட்டி விட வேண்டும்.

ii) வாடகைக்கு விட்டிருந்தால், agreement உங்கள் பெயரில்தான் இருக்க வேண்டும். அதற்கான வாடகைப் பணம் உங்கள் பெயரில் வங்கியில் போடப்பட வேண்டும். ஒரு வேளை நீங்கள் Power of Attorney மூலம் வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைப் பணத்தை அவர் வாங்கி உங்கள் வங்கி அக்கவுண்ட்டி-ல் போடவேண்டும். அவர்கள் மூலம் வரிகள் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டால் அதற்கான நகலை (copy) நீங்கள் அனுப்பச் சொல்லி பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அரசாங்க இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளவேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தவறாமல் புதுப்பிக்க (renewal) வேண்டும்.

சொத்தை தரிந்தவர்கள்தான் பராமரிக்கிறார்கள் என்று சிறிதளவும் அலட்சியமாக இருத்தல் கூடாது.

b) நிலமாக இருந்தால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:

i) உங்கள் பெயரில் பட்டா வாங்கி விட்டீர்களா என்பது மிக மிக முக்கியம்.
பட்டா வாங்காமலிருந்தால் முதலில் அதை வாங்கி விடுங்கள்.

ii)வருடத்திற்கு ஒரு முறை வில்லங்க சான்றிதழ் (EC) விண்ணப்பம் செய்து
வாங்கிக் கொள்வது நல்லது.

iii) உங்கள் நிலத்தைப் பராமரிப்பவர் அவ்வப்போது இடத்திற்குச் சென்று பார்வையிட்டு
யாராவது ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

iv) நீங்கள் இங்கு வரும் போது தவறாமல் நேரில் சென்று இடத்தை பார்வை
இடுங்கள்.

v) வரி கட்ட வேண்டிய இடமாக இருந்தால் தவறாமல் கட்டிவிடவேண்டும்.

vi) தாய்ப் பத்திரத்தை (Parent Documents) நிலம் வாங்கியவரிடமிருந்து
வாங்கி விட்டீர்களா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய அனைத்து சேவைகளையும் ட்ரைஸ்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் எங்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்:

எங்கள் அலுவலக முகவரி (office address):

Tristar Housing and Developments Pvt. Ltd.,
Flat No.24, Green Palace,
No.1, South Thandapani Street,
T.Nagar, Chennai – 600 017,
Tamilnadu, India.
Phone : 044 – 2431 2431, 2431 2323 Fax: 044 – 24312424
Website: www.tristarhousing.com <http://www.tristarhousing.com>
Email: info@tristarhousing.com

வாசகர்களுக்கு இது போன்ற கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட படிவத்ததின் மூலம் அனுப்பிவைக்கலாம்.

Disclaimer : The information in the above article are obtained from sources, which we believe to be reliable. We make no guarantee, representation, or warranty in respect of the information contained herein and accept no liability as to its accuracy or completeness.

About The Author

3 Comments

  1. jagadesh

    சொத்து வரி எப்படி வாங்குவது அவ்வாரு வாங்கிய சொத்து வரியை எப்படி எங்கு வரி கட்டுவ்து என்ரு கூருஙலென்

  2. Hari Krishnan

    என் சொத்துக்கலை நான் ஒரு நபரிடம் பவர் ஆப் அட்டார்னி கொடுத்தேன்.அவர் அந்த சொத்தை விற்ற பிறகு எனக்கு பத்திரத்தின் காப்பி தரவேண்டுமா?

Comments are closed.