வைக்கோல் போரு

கருங்கல்லை எடுத்து வைச்சு
கரையான் மருந்து தெளிச்சு
கம்புகளை எடுத் தடுக்கி
கச்சிதமா பட்றை செஞ்சு

கதிரடிச்சுக் காய்ஞ்ச வைக்கோலை
கட்டுக் கட்டி அள்ளிப் போட்டு
காலால் மிதிப்பவனை உயர வளர்த்து
கடகடன்னு உயருது வைக்கோல் போரு

அடிபெருத்த அதன் உச்சி
அரை அடியாய் குறுகிடவே
அதன் உச்சி நிற்பவனோ
அஞ்சுகிறான் உயரம் கண்டே

ஏணித் துணை இல்லாமலே – வைக்கோல்
ஏற்றிவிட்ட உச்சி நின்று
எகிறிக் குதிக்க அவன் முயலின்
எலும்புகளும் முறியுந் தானே

உதவிகள் ஏதுமின்றி உயர்ந்ததாய்
உரக்கச் சொல்லும் மானிடனே
அடி பெருத்த உன் வாழ்வும்
அடங்கி ஒருநாள் ஒடுங்கிடுமே

ஏணியாம் மனித மனங்களை
இன்றேனும் சம்பாதித்துக்கொள்
ஏற்றிவிட உதவிடாவிட்டாலும்-பத்திரமாக
இறக்கிவிட உதவிடலாம் என்றேனும்

About The Author

3 Comments

  1. panneerselvam

    எல்லாமெ
    எது தொடக்கம் எது முடிவு
    ஒன்ரை தொடங்கினால் ஒன்ரு முடிகிரது
    வெரொன்ரை தொடங்கினால் மட்ரொன்ரு முடிகிரது
    தொடக்கம்தான் முடிவின் தொடக்கமா இல்லை
    முடிவுதான் தொடக்கதின் முடிவா
    எது தொடக்கம் எது முடிவு
    எல்லாமெ

  2. PazamaiPesi

    ஆகா! கலக்கல் ஓடை!! அருமைங்க!!!
    வக்கப்போரு எல்லாம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு போங்க.
    இப்படி யாருன்னா எழுதுனா நெனச்சிப் பாக்கறதோட சரி!

Comments are closed.