ஹிஸ்ட்ரியானிக் எனும் மன ஒழுங்கின்மை

குறிப்பு : ஜெர்மன் மொழிக் கட்டுரை ஒன்றிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

histrionic = நாடகம், நடிப்பு, மாறுவேடம்
தன்னை உயர்த்திக் காட்ட விரும்பும் மனப்பான்மை, நாடகமாடும் பழக்கம்.

Histrionic எனும் மன ஒழுங்கின்மைக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்களுடைய கவனத்தைப் பெற எப்போதும் விரும்புவார்கள். ‘தான் செய்வதுதான் சரி’ என மற்றவர்கள் சொல்வதை விரும்புவார்கள்.

மற்றவர்களுடன் உரையாடும்போது உண்மைக்கு மாறான தகவல்களை அளிப்பார்கள். திடீர் திடீரென உணர்வுகளில் மாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாமல் தவிப்பார்கள். இதனால் தாங்கள் விரும்புவதை உடனடியாகப் பெற கடினமாக முயல்வார்கள். சிறிய விஷயங்கள் கூட அவர்களுடைய உணர்வுகளில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதிர்ச்சியான உணர்வை உடனடியாகப் பெறுவார்கள். மற்றவர்களுடைய விஷயங்களைக் குறித்து அதிகமாக சிந்திப்பார்கள். மற்றவர்களுடைய விஷயங்களில் அதிகமாகத் தலையிடவும் முயல்வார்கள்.

இந்த மன அழுத்த நோயை பரிசோத்தித்துப் பார்க்கும் முறை Hypochondrie-Hysterie-Inventar (HHI) என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் மற்றவர்களிடம் தங்களை எப்படிப்பட்டவர்கள் என்று காட்ட விரும்புவதை அறிய முடியும். வேறொருவருடைய கட்டுப்பாட்டில் இல்லாதபோது எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும். மற்றவர்களுடனான சிநேகப்பான்மையான தொடர்பாடல், மன அழுத்தம் உள்ள சமயங்களில் தன் குற்றத்தை மறுத்து வாதாடுவது, கோபம் அல்லது ஆளுமை உணர்வின் தாக்கம் அதிகரிக்கும்போது தன்னைக் குறித்து பரிதாபிப்பது போன்றவற்றைக் கண்டறிய முடியும்.

இந்த நோயில் சில வகைகள் உண்டு

ICD மற்றும் DSM:

பின்வரும் கூற்றுகளில் குறைந்தது நான்கு தன்மைகள் பொருந்தினால் ICD எனவகைப்படுத்தப்படும்.

1. தன்னைப் பற்றிய நாடகப்பாணியிலான நினைப்பு மற்றும் உணர்வுகளை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவது.
2. நிஜமான சம்பவங்களை மிகைப்படுத்துவது. மற்றவர்களால் அல்லது சூழ்நிலைகளால் இலகுவாக பாதிக்கப்படுவது..
3. அதீத அதிர்ச்சி உணர்வு.
4. தன்னை முன்னிலைப்படுத்த விரும்பி, சுவாரசியமான சூழ்நிலைமைகளை நாடுவது மற்றும் தன்னை முதன்மைப்படுத்தி மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது.
5. பொருத்தமற்ற வெளித்தோற்றத்தின் மூலம் அல்லது செயல்களின் ஊடாக மற்றவர்களை பொருத்தமற்ற செயலைச் செய்யத் தூண்டுவது.
6. அளவுக்கு அதிகமாக வேலைகளை (எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பது) செய்வதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் சுறுசுறுப்பான நபராக தன்னைக் காட்டிக் கொள்வது.
சுயநலமான சிந்தனை, தன் விருப்பத்தை நிறைவேற்ற தீவிர ஆசை, தொடர்ச்சியாக மற்றவர்களுடைய அங்கீகாரத்தை நாடுவது, மற்றவர்களுடைய தேவைகளைக் காணத் தவறுவது, எளிதில் புண்படும் மனம், சம்பங்களை மிகைப்படுத்தி வர்ணிப்பது.

DSM-IV:

மிகைப்படுத்திய உணர்வுகள் கொண்டிருப்பது மற்றும் தொடர்ச்சியாக மற்றவர்களுடைய கவனத்தைப் பெறத் துடிப்பது இவ்வகையைச் சாரும்.

1. மற்றவர்களுடைய கவனத்தில் தான் முதல் இடத்தில் இல்லை என்பதை உணரும் சூழ்நிலைமைகளில் தர்மசங்கடமாக உணருவார்கள்.
2. Interaction (செயலெதிர்ச்செயல்) மூலம் மற்றவர்களை இடறச்செய்வது, பாலியல் ஆசை காட்டி அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே வம்புக்கு வரச்செய்வது.
3. திடீர் திடீரென மாறும் மேலோட்டமான உணர்வுகளை வெளிப்படுத்துதல்.
4. மற்றவர்களுடைய கவனத்தைப் பெறுவதற்காக தவறாமல் தன் உடல் தோற்றத்தில் கவனம் செலுத்துதல்.
5. Impressionism: உரையாடலில் கருத்துக்களை விட சொற்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது. உரையாடலில் தரம் இருக்காது.
6. சூழல் மற்றும் சக மனிதர்களால் இவர்களது உணர்வுகள் எளிதில் பாதிக்கப்படும்
7. மற்றவர்களுடனான உறவு மேலோட்டமானதாக இருந்தாலும் அது பலமான அல்லது நட்பு எனக் கருதுவது.

இந்த மனஅழுத்த நோயை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.”

About The Author