இராசிபலன்கள் (22-9-2014 முதல் 28-9-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு, உர வியாபாரிகள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், நீர்வளத்துறையில் பணிபுரிபவர்கள், மருத்துவர்கள், மூலிகை சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நல்ல இலாபம் அடைவர். மற்றவர் விஷயங்களில் தலையிட்டுப் பிரச்சினைகளை விலைக்கு வாங்கி நிம்மதியை இழக்க வேண்டாம்! திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேரலாம். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய காலமாகும். புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். பொதுநலத் தொண்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புனிதப் பயணம் சென்று வர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பிறருக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். மாமன் வழி மூலம் சில நன்மைகளை அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது!

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் வழிபாடும் பச்சரிசி தானமும் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். பழைய இரும்பு, பழைய இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், மத போதகர்கள், மடாதிபதிகள், கழிவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், மின்னணு ஆராய்ச்சித்துறையைச் சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். அடுத்தவர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை! புதிய வீடு, நிலம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் செலவுகள் ஏற்படும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. மூலம் போன்ற உடற்சூடு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் விரயம் ஏற்படலாம். நீண்ட பயணங்களால் நிம்மதி ஏற்படாது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் எதிர்பாராத வரவு உண்டாகும். வாகனங்கள், வீடு போன்றவற்றைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவு ஏற்படலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டத்தால் வீண் விரயம் ஏற்படும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் வரவுகள் உண்டு. வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைத் திருத்திக் கட்டவும், வீடு மாறவும் எண்ணுவீர்கள். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு, எண்ணெய் சம்பந்தமான வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். உறவினர்கள் நண்பர்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் உண்டாகும். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடும் எள் சாத தானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். வாயுத்தொல்லை, வயிற்றுத் தொல்லை ஆகியவை வந்து போகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! பங்காளிகளாலும், நண்பர்களாலும் சிற்சில தொல்லைகள் ஏற்படலாம். ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! வட திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்து உண்டு. மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். விருந்தினர் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற சஞ்சலமும் குழப்பங்களும் வரக்கூடும். புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்த்தல் நல்லது! கட்டட சம்பந்தமான தரகுத் தொழில் செய்பவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், அழகு சாதனப் பொருள் வியாபாரிகள், கட்டுமானப் பொருள் விற்பனை செய்பவர்கள், தானியங்கள், பயறு, பருப்பு போன்ற பொருட்களை விற்பவர்கள், வீடு, நிலம் வாங்குவோர் / விற்போர், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடும் மொச்சைப் பயறு தானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், உணவகத் தொழில் செய்பவர்கள், அதில் பணியாற்றுபவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், யோகாசனப் பயிற்சிக்கூடம் நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்க்கு நல்ல பலன்கள் வந்து சேரும். நீண்ட பயணங்களைத் தவிர்த்தல் நல்லது! வாதம், வாயு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்பு நீங்கி உறவு பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவது பற்றித் தகவல்கள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பணம் வந்து சேரும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடும் துவரை தானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். வங்கிகளிலிருந்து வர வேண்டிய பணம், வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! பணியில் இடமாற்றம் ஏற்படும்! பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! பூ, பழம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நகை வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைக் காப்பகம் நடத்துபவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக்கூடம் நடத்துபவர்கள், பொறியியல், கணினி ஆகிய துறைகளைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் தன வரவு உண்டாகும். தீராத, நாட்பட்ட வழக்குகள் தீர நல்ல முடிவு கிடைக்கும். நரம்பு, எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். பழைய கடன்கள் அடைபடும். பயணங்களை விலக்குதல் நல்லது. உறவினர்களிடமிருந்து தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ வழிபாடும் கடலை தானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்கள் பயணத்தின்போது கவனத்துடன் செயல்பட வேண்டும்! புதிய வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தாமதமாகச் செய்வது நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள்! சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தம் இல்லாத பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும்! பழைய இரும்பு, பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், ஆதரவற்றோர் விடுதிகளில் இருப்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், மத போதகர்கள், அசைவ உணவுப் பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். காதல் விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலைக்கும் இன்ன பிற வேலைகளுக்குமான பணி முயற்சிகள் வெற்றி தேடித் தரும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வரவால் செலவுகள் உண்டாகும். புனிதப் பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து கோதுமை தானமும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலர் இருப்பிடம் விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், இலை, கீரை விற்பவர்கள், மருந்துப் பொருள் விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சகம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளைச் செய்து வெற்றி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள். நெடு நாட்களாகத் திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். உறவினர்கள் நண்பர்களின் வரவால் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! தெய்வத் தொண்டுகளை ஆர்வத்துடன் செய்வீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். விசா சம்பந்தமான நாட்பட்ட பிரச்சினைகள் தீரும் காலமாகும். பெரியவர்களின் நல்லாசி கிடைக்கும். பெண்களால் வட திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கை கூடும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடும் பாசிப் பயறு தானமும் செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் இலாபம் அடைவர். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். கண்களில் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! புதிய வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவியோடு வாங்குவீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாய்நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன. நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும்! நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், யோகாசனப் பயிற்சிக்கூடம் நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், இராணுவத்தினர், உணவகத் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்க்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியம் கை கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவும் உண்டு. புனிதப் பயணம் சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்றுத் தாமதம் ஏற்படும். மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடும் துவரை தானமும் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் செலவு ஏற்படும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பழைய பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள், இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு, எண்ணெய் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். தந்தையால் பொருள் வரவு உண்டு. உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. கைவிட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பொருள் வரவு உண்டாகலாம். குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்வீர்கள். தந்தை – மகன் உறவில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பூர்விகச் சொத்துக்கள் வந்து சேரும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் எள் சாத தானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது. பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! சகோதர சகோதரிகளின் தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும். விருந்தினர் வரவால் மகிழ்ச்சி உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! மகான்களின் எதிர்பாராத தரிசனத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம். இலை, கீரை வகைகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சகம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் நிம்மதி அடைவீர்கள். நீண்ட பயணங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பூர்விக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடும் பாசிப்பயறு தானமும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட பயணங்களில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! செய்யும் தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். கண்களில் கவனம் தேவை! நண்பர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மாணவர்கள், அரசியல்வாதிகள், பொது நலத் தொண்டு செய்பவர்கள், ஆலயப் பணியாளர்கள், மந்திரிகள், மருந்துப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பணியில் இடமாற்றம் ஏற்படும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை! காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த காரியங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ வழிபாடும் கோதுமை தானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author

2 Comments

  1. VIVEKANANDAN P A

    Ple ase let me have latest rasipalan forecast every week from today. Thank you. Regards.

Comments are closed.