View Cart “அடிமையின் மீட்சி” has been added to your cart.
104_Kaviya_Nayagan_Nethaji

$8

சுபாஷ் சந்திர போஸின் இளமைப் பருவம் துறவறமா, பொதுப் பணியா என குறிக்கோளைத் தேடிய பருவம். எனினும், தந்தையின் விருப்பம் குறுக்கிட, லண்டன் சென்று, ஐ.சி.எஸ்சில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறார். தேசம் அறைகூவல் விடுக்க பதவியைத் துறந்து, இந்தியா திரும்புகிறார். காந்திஜியின் சாத்விகப்போக்கு பிடிக்காமல், சித்தரஞ்சன் தாஸின் தலைமை ஏற்று, சிறை சென்று சித்திரவதை அனுபவிக்கிறார். உடல் நிலை சீர் கெட, வியன்னா சென்று சிகிச்சை பெற்று குணமடைகிறார். ஐரோப்பாவில் பலநாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து அனுதாபமும் அனுபவமும் சேகரிக்கிறார். இந்தியா திரும்பி இருமுறை காங்கிரஸ் தலைமை ஏற்றும், ஒத்துழைப்பு இல்லாததால் மனம் நொந்து, ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்குகிறார். மீண்டும் சிறை. வீட்டுக் காவல். மாயமாய் மறைந்து சாகசங்கள் புரிந்து ஜப்பானை அடைகிறார். இந்திய தேசிய ராணுவத் தலைமையேற்று, ஜப்பானுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்று இந்தியாவை நோக்கி முன்னேறுகிறார். ஜப்பான் சரண் அடைந்துவிட, திட்டங்கள் தோல்வி. ரஷ்யா வசமுள்ள மஞ்சூரியாவை நோக்கிப் பயணிக்கையில், விமானம் வெடித்து இறந்ததாக அறிவிப்பு. இது குறித்த சர்ச்சைகள். சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை வெறும் குறிப்பேடாக இல்லாமல் ஆசிரியர் ஆய்வு பூர்வமாக ஒரு புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார். இந்த நூலில் காணப்படும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து சித்தரிக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. நேதாஜியின் சமகாலத் தியாகிகளின் வாழ்வில் நடந்த குறிப்புக்களும் அவருக்கும் காந்திஜிக்கும் உள்ள அணுகுமுறை வித்தியாசங்களும் சுவையோடும், பாரபட்சமற்ற முறையிலும் கூறப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கையைப் பற்றிய பல நூல்கள் வெளி வந்திருந்தாலும் தெளிவான சான்றுகளுடன் மிகுந்த முனைப்பாட்டுடனும், ஆராய்ச்சி பூர்வமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் படிப்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி.

Quantity

SKU: 5b9f09c8660d.

Product Description

Public Service or becoming a sanyasi by renouncing the world…? A debate was raging in the mind of young Subhash Chandra Bose when his father’s aspirations intervened and decided his course. Subhash successfully completes ICS from London. Heeding to the call of his motherland, he renounces the post and returns to Bharat. Disapproving Gandhiji’s non violent ways, he accepts the leadership of Chittaranjan Das and undergoes sufferings in various prisons. As his health deteriorates, he goes to Vienna for treatment. Visits various European countries and meets leaders there to garner support and gains experience. On his return, he accepts the leadership of Congress twice. Dejected that he could not gain cooperation in Congress, he quits and launches the Forward Bloc. He was placed under house arrest. After a dramatic escape, he arrives in Japan. He forms the Indian National Army, forges an alliance with the Japanese and after many victories in the war, advances towards India. Unfortunately, his plans fail as Japan surrenders. On his flight to Manchuria, occupied by Russia, his plane blows up and it is announced that he died in the mishap. The author has approached Subhash Chandra Bose’s life in a novel way. The book is not just a handbook of events in Bose’s life. His life story interwined with the Indian Freedoom struggle makes interesting reading. Anecdotes from the lives of contemporary freedom fighters of Netaji adds colour to the book. The differences in the approach of Bapuji and Netaji have been brought out in a balanced manner without any prejudice. With clear and relevant references, simple and interesting style of writing, the book stands out among the various books so far brought out about Netaji. The book reflects the dedication of the author and the research he has done and is sure to create an impact on the readers. (சுபாஷ் சந்திர போஸின் இளமைப் பருவம் துறவறமா, பொதுப் பணியா என குறிக்கோளைத் தேடிய பருவம். எனினும், தந்தையின் விருப்பம் குறுக்கிட, லண்டன் சென்று, ஐ.சி.எஸ்சில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறார். தேசம் அறைகூவல் விடுக்க பதவியைத் துறந்து, இந்தியா திரும்புகிறார். காந்திஜியின் சாத்விகப்போக்கு பிடிக்காமல், சித்தரஞ்சன் தாஸின் தலைமை ஏற்று, சிறை சென்று சித்திரவதை அனுபவிக்கிறார். உடல் நிலை சீர் கெட, வியன்னா சென்று சிகிச்சை பெற்று குணமடைகிறார். ஐரோப்பாவில் பலநாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து அனுதாபமும் அனுபவமும் சேகரிக்கிறார். இந்தியா திரும்பி இருமுறை காங்கிரஸ் தலைமை ஏற்றும், ஒத்துழைப்பு இல்லாததால் மனம் நொந்து, ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்குகிறார். மீண்டும் சிறை. வீட்டுக் காவல். மாயமாய் மறைந்து சாகசங்கள் புரிந்து ஜப்பானை அடைகிறார். இந்திய தேசிய ராணுவத் தலைமையேற்று, ஜப்பானுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்று இந்தியாவை நோக்கி முன்னேறுகிறார். ஜப்பான் சரண் அடைந்துவிட, திட்டங்கள் தோல்வி. ரஷ்யா வசமுள்ள மஞ்சூரியாவை நோக்கிப் பயணிக்கையில், விமானம் வெடித்து இறந்ததாக அறிவிப்பு. இது குறித்த சர்ச்சைகள். சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை வெறும் குறிப்பேடாக இல்லாமல் ஆசிரியர் ஆய்வு பூர்வமாக ஒரு புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார். இந்த நூலில் காணப்படும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து சித்தரிக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. நேதாஜியின் சமகாலத் தியாகிகளின் வாழ்வில் நடந்த குறிப்புக்களும் அவருக்கும் காந்திஜிக்கும் உள்ள அணுகுமுறை வித்தியாசங்களும் சுவையோடும், பாரபட்சமற்ற முறையிலும் கூறப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கையைப் பற்றிய பல நூல்கள் வெளி வந்திருந்தாலும் தெளிவான சான்றுகளுடன் மிகுந்த முனைப்பாட்டுடனும், ஆராய்ச்சி பூர்வமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் படிப்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி.)

Additional Information

ebookauthor

டி.எஸ்.வேங்கட ரமணி