சிங் (3)

<<<<சென்ற வாரம்

கர்நாடகத்தில் அம்மாசந்த்ரா எனும் இடத்தில் கெய்சர் என்ஜினீயர்ஸ் எனப்படும் ஒரு அமெரிக்கக் கம்பனியின் உதவியுடன் கட்டப்பட்டு, அந்த கம்பனியாலேயே நடத்தப் பட்டு வரும் மைசூர் சிம்ண்ட்ஸ் என்ற சிமண்ட் தொழிற்சாலையின் பங்களூர் ஆபீசில் பர்ச்சேஸ் ஆபீசராக பணி புரிந்து வந்தேன். அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல ஜீப் வரும்பொழுதெல்லாம் எனக்கு முன்னே சிங்க் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுவான். பாவம் என் மனைவி! ஒவ்வொரு நாளும் அவனை விடாப் பிடியாக வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போன பின்பு தான் நான் கிளம்புவேன்.

ஒரு நாள் பழுது பார்ப்பதற்காக ஜீப் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததினால் ரேஸ்கோர்ஸ் ரோடில் நாலாவது மாடியிலிருந்த எனது அலுவலகத்திற்கு (இந்திரா நகரிலிருந்து சுமார் 13/14 கிலோ மீட்டர் தூரம்) அன்றைக்கு நான் ஒரு ஆடோரிக்ஷாவில் செல்ல நேர்ந்தது. நானே கற்றுக்கொண்டு கடை பிடித்து வரும் கொள்கைகளில் முக்கியமானதொன்று நேரம் தவறாமை. அலுவலகம் ஆரம்பிக்கும் நேரம் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்ததால், ஆட்டோவிலிருந்து இறங்கிய அக்கணமே அவசரமாக உள்ளே சென்று படியேறத் தொடங்கிய என்னைப் பின்னாலிருந்து ஒருவர், "சார் சார் உங்கள் பின்னே பாருங்கள்" என்று கூவியதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் என்ன ஆச்சரியம்! சிங் என் பின்னே நொண்டிக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தான்! என்ன செய்வது? படியேறி எனது அறையில் எனது பையை வைத்து விட்டு, சிங்கனைக் கூட அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்குச் சென்று அவனை விட்டு விட்டு, அதே ஆட்டோவில் அலுவ்லகம் திரும்பினேன்.

என்னைப் பற்றிய ஒரு விஷயம் – என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளும்படி தமிழில் எழுத முடியாத காரணத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதிவிடுகிறேன்.

I was an alcoholic. As a former member of AA – Alcoholics Anonymous – let me categorically state that an alcoholic can never be dubbed as a drunkard. In my case, I seldom missed my office owing to excessive drinking, never went to office after imbibing alcohol. Of course soon after I left office in the evening, I would rush to the Golf Club, sit and gab with co-drinker-friends till closing hours, then go to a bar and finally end up in a cheap pub, before leaving for home. All holidays were, invariably spent in clubs, bars and pubs. None of the alcoholics including me belonging to the club would ever use swearwords or obscene language. Because by God’s Grace, I had inherited a deep love for Music, I would sing whatever film songs that came to my mind or was asked for by my friends-mostly Hindi, sometimes English, and sometimes, surprisingly, even devotional songs!

ஓரிரவு நேரம் கழித்து வீட்டிற்குச் சென்றபொழுது போதையிலிருந்த நான், எதிர்பாராமல் அன்று வந்திருந்த என் மாமனார் பேசிய வசைமொழிகளைத் தாளாமல், என்னறைக்குச் சென்று என் பெட்டியில் இருந்த ஒரு 500/600 ரூபாய்களை (1973ல் அத்தொகைக்கு இப்போதைவிடப் பன்மடங்கு மதிப்பு) எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து அப்பொழுது பங்களூரில் இருந்த ஆபெரா தியேட்டருக்கு அருகாமையில் இருக்கும் மால்கம்ஸ் ரோடிலிருந்த சாராயக் கடைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன். அல்சூர் வரை வந்த ஆட்டோக்காரர் பின்னே திரும்பிப் பார்த்து விட்டு, "சார், உங்களைத் தொடர்ந்து கொண்டே ஒரு நாய் வருகிறதே. ஏனென்று புரியவில்லையே" என்றார். நான் வண்டியை நிறுத்தச் சொல்லித் திரும்பிப் பார்ப்பதற்குள், வண்டியினுள் ஏறி உட்கார்ந்து விட்டான் எனது சிங்! என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை.

உருது பேசும் அந்த ஆட்டோக்காரார் ஆயிரத்தில் ஒருவர் போலும். அவரது பாஷையில் "பரவாயில்லை. உட்கார வைத்துக் கொள்ளுங்கள் சார். மனிதர்களை விட நன்றியுள்ள மிருகங்கள் எவ்வளவோ மேல்" என்றார். பொழுது போவதே தெரியாமல் மதுபானக் கடையில் வழக்கத்தைவிட அதிகமாக மது அருந்திவிட்டு வீடு திரும்பிய நான் ஆபரா அருகில் வரும்பொழுது என்னையறியாமலேயே மயக்கமாய் விழுந்து விட்டேன். நடைபாதையில் கிடந்த நான் கண்விழித்து ஆகாயத்தை நோக்கலானேன். அது விடிகால வேளை என்று புரிந்து கொண்டு மிக அதிர்ச்சியுற்றேன். சட்டென்றெழுந்து ஓடிப்போய் "ஆபெரா வளையத்தில்" (Opera Circle. It is all gone now) நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு "தயவு செய்து உடனே இந்திரா நகருக்கு வண்டியைச் செலுத்து" என்று சொல்வதற்குள், திடீரென சிங் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தவுடன்தான் ஐயோ அவனை மறந்தே விட்டேனே என்ற குற்ற உணர்வுடன் மிக வருந்தி, "இந்த நாய் என்னுடையது தான். என்னுடன் வருவதற்கு தயவு செய்து அனுமதித்துவிடு" என்று வண்டியோட்டியிடன் சொன்னேன். அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதைக் கேளுங்கள்.

"என்ன சார், கண்மண் தெரியாது குடித்துவிட்டு வந்து வழியில் விழுந்துவிட்டு உங்களுக்குக் காவலாக இரவு முழுதும் உங்களிடமிருந்த உங்களருமை நாயைக் கூட மறந்து விட்டீர்களே. ஓருவரைக் கூட உங்களை நெருங்க விடவில்லை சார். ஒரு மாதிரி அழுகைக் குரலெழுப்பிக் கொண்டு உங்களைச் சுற்றிச் சுற்றி வரும். உங்களை யாராவது நெருங்க யத்தனித்தால் உடனே அவர்மீது பாயத் தொடங்கும். இந்த மாதிரி அருமையான நாயை இதுவரை நான் பார்த்ததேயில்லை. கேள்விப் பட்டதுமில்லை சார்" என்று சொல்லிக் கொண்டே என்னையும் சிங்கனையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதைப் படிப்பவர்கள், என் உள்ளக்கிடைக்கையையெல்லாம் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

1985, டிசம்பர் மாதம் 23ம் தேதி சிங்க் எங்களைப் பிரிந்து வான் புகுந்தான்.

மேலும் பல…..

About The Author